ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா எடை குறைய காலையில் இதை பண்ணுங்க பொதும்
தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க (Weight Loss) நாம் நமது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். சில எளிய வழிகளில் உடல் எடையை சுபலமாக கட்டுக்குள் வைக்கலாம். உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க காலை வேளைகளில் கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் உடலின் வளர்ச்சியை மாற்றம் மேன்மை அடைகிறது. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். இது எடை இழப்பில் உதவும்.
காலை உணவில் (Breakfast) அதிகப்படியான புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதச்சத்து அதிகமாக உள்ள முட்டை, தயிர் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இவற்றால் கலோரிகளும் அதிகரிக்காது.
காலையில் தினமும் 20 முதல் 30 நிமிடங்களுக்கு கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்யலாம், அல்லது ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றில் ஒன்றையும் வசதிக்கேற்ப செய்யலாம். இதன் மூலம் நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும், கலோரிகளும் வேகமாக குறையும்.
காலை வேளையில் இனிப்புகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். தொப்பை கொழுப்பும் அதிகரிக்காது.
தொப்பை கொழுப்பை குறைக்க காலை உணவு மட்டுமில்லாமல் மதிய உணவு மற்றும் இரவு உணவிலும் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக காலை உணவில் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது.
காலை உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றன. இவற்றால் கூடுதல் கலோரிகளும் உடலில் சேராது.
உடல் எடையை குறைக்க முளைகட்டிய பயறு வகைகளை சாட் செய்து சாப்பிடுவது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் முளைத்த பயறுகளை உட்கொண்டால் உடலுக்கு நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. இதனால் எடையும் அதிகரிக்காது.
காலை உணவுக்கு ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான ஒரு தேர்வாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் இது கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.