தொப்பை கொழுப்பு கரைய, உடல் பருமன் உடனே குறைய.... காலையில் இதை செய்தால் போதும்
உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதை சரி செய்ய மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள். பல வித கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.
காலை எழுந்தவுடன் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தினால் தொப்பை கொழுப்பு குறைவதுடன் உடல் எடையும் வேகமாக குறையும். சில குறிப்புகளை பின்பற்றினால் உடலில் அதிக கலோரிகள் சேராமல் தவிர்க்கலாம்.
இரவில் குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியமாகும். இரவில் நாம் தூங்கும் நேரத்தின் அளவு நமது உடல் பருமனோடு நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. ஆகையால் கண்டிப்பாக தினமும் போதுமான அளவு உறக்கம் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். இது செரிமானத்தை சீர் செய்வதுடன் நாள் முழுவதும் உடலில் சேரும் கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவுகின்றது.
ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது உடல் எடைடை வேகமாக குறைக்க உதவும். நமக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்றவாறு காலையில் உடற்பயிற்சி, யோகாசனம், ஒட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி என ஏதாவது ஒன்றில் ஈடுபடலாம். இதனால் கலோரிகள் வேகமாக குறையும்.
உடல் எடையை குறைப்பதிலும் தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பதிலும் காலை உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது. லேசான காலை உணவை உட்கொள்வது அவசியம். மேலும் கலோரிகள் குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் உள்ள உணவுகளை காலையில் உட்கொள்ள வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது தேநீர் பருகுவதற்கு பதிலாக எலுமிச்சை, இலவங்கப்பட்டை, சீரகம், ஓமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிலான மூலிகை தேநீரை பருகலாம். இது கலோரிகளை எரிக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
காலை வேளையில் அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகள், காரத்தன்மை, புளிப்புத்தன்மை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் காலையில் மன நிலையை இறுக்கம், அழுத்தம் இல்லாமல் அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆரோக்கியமான மனப்போக்கும் அவசியமாகும். நாம் உடல் எடையை குறைக்க டயட் பிளான், ஜிம் என பல திட்டங்களை தீட்டினால் மட்டும் போதாது. இதில் நாம் அதிகப்படியான அர்ப்பணிப்பையும் நிலைத்தன்மையையும் காட்ட வேண்டும். அப்போதுதான் எடை இழப்புக்கான நமது கனவு நிஜமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.