ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் யார் யார்?
1998ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 16 அரைசதங்களை அடித்தார்.
அதேபோல், சச்சின் டெண்டுல்கர் 1996ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 15 அரைசதங்களை அடித்தார்.
சுப்மான் கில் இந்தாண்டு ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14 அரைசதங்களை அடித்திருக்கிறார்.
விராட் கோலியும் இந்தாண்டு ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14 அரைசதங்களை அடித்துள்ளார்.
தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கேப்டனுமான ராகுல் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் 1999ஆம் ஆண்டு 14 அரைசதங்களை அடித்திருந்தார்.
சௌரவ் கங்குலி 1999ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14 அரைசதங்களை அடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் 2007ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14 அரைசதங்களை அடித்தார்.