இதுவரை வெளியாகி உள்ள சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்!

Sun, 02 Apr 2023-1:45 pm,

விஷ்ணு நடிப்பில் வெளியான 'ராட்சசன்' எனும் திரில்லர் படம் எந்த காலத்திலும் பார்க்க ஏற்ற தரமான படம்.  டீனேஜ் பெண்களை தொடர்ந்து கொள்ளும் ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் போராடுவது தான் இப்படத்தின் கதை.

 

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் சிறப்பான அனுபவத்தை தரும்.  புராணங்களில் வரும் விக்ரமாதித்யா மற்றும் வேதாளம் கதாபாத்திரங்களின் அடிப்படையில் ஒரு கொடூரமான வில்லனை பற்றியும், நல்ல போலீஸ் அதிகாரி பற்றியும் இப்படத்தின் கதை விவரிக்கிறது.

 

நிகில் சித்தார்த்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ஒரு ஆக்ஷன்-சாகச திரைப்படம் தான் 'கார்த்திகேயா'.  ஒரு இளம் மருத்துவர் ஒரு கிராமத்தில் நடக்கும் மர்மமான மரணங்களை ஆராய்ச்சி செய்து என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை இப்படம் விவரிக்கிறது.

 

மோகன்லால், ப்ரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான அரசியல் கதைக்களம் கொண்ட படம் தான் 'லூசிஃபர்'.  ஒரு அரசியல்வாதி மரணத்திற்கு பிறகு அவரது குடும்பத்தில் பதவிக்காக நடைபெறும் போட்டியை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'வேட்டையாடு விளையாடு' படம் இன்றுவரை பல தமிழ் ரசிங்கர்களின் ஃபேவரைட்டான படமாக உள்ளது.  பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரர்களை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை இப்படம் விவரிக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link