ஒரே விலையில் கிடைக்கும் ஐபோன் 14 & ஐபோன் 14 பிளஸ் மொபைல்கள்... எதை வாங்கலாம்?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசையாக இருக்கும். இருப்பினும் விலை சற்றே கூடுதல் என்பதால் அதனை வாங்க தயக்கம் காட்டுவார்கள்.
இருப்பினும் பிளிப்கார்ட், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் அவ்வப்போது சில தயாரிப்புகளுக்கு அதிரடி தள்ளுபடியை வழங்கும்.
அந்த வகையில் பிளிப்கார்ட் தற்போது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன்களை 58 ஆயிரத்து 999 ரூபாயில் விற்பனை செய்கிறது. இதைவிட இந்த மொபைல்களின் விலை குறைந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலும், தற்போதைய நிலவரப்படி ஆப்பிள் ஸ்டோர்களை விட பிளிப்கார்டில் இந்த ஆப்பரில்தான் நீங்கள் இந்த மொபைல் இந்த விலைக்கு வாங்க முடியும் எனலாம்.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஸ்டோர்களில் ஐபோன் 14 மொபைல் 69 ஆயிரத்து 900 ரூபாய்க்கும், ஐபோன் 14 பிளஸ் மொபைல் 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது பிளிப்கார்டில் இந்த இரு மொபைல்களும் 58 ஆயிரத்து 999 ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதாவது, பிளிப்கார்ட் நிறுவனம் ஐபோன் 14 மொபைலுக்கு 10 ஆயிரத்து 901 ரூபாய் குறைவாகவும், ஐபோன் 14 பிளஸ் மொபைல் 20 ஆயிரத்து 91 ரூபாய் குறைவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது குறுகிய கால ஆப்பர் என்பதால் வாடிக்கையாளர்கள் இதனை வாங்க நினைத்தால் கால தாமதம் செய்யாமல் உடனே முடிவு செய்து ஆர்டர் செய்யவும்.
இரண்டு மொபைல்களுமே வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை தரக்கூடியவை தான். ஐபோன் சீரிஸில் Pro மாடல் மட்டுமே பெரிய அளவுக்கு வித்தியாசம் பெறும். ஐபோன் பயனர்களை பொறுத்தவரை அனைத்துமே சூப்பரான மாடல்கள்தான்.
ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மாடல் பேட்டரி மற்றும் டிஸ்ப்ளே அளவை தவிர்த்து மற்ற அனைத்து அம்சங்களும் ஒரு மாதிரியாது தான்.
ஐபோன் 14 பிளஸ் டிஸ்ப்ளே - 7.7 இன்ச், ஐபோன் 14 டிஸ்ப்ளே 61. இன்ச் ஆகும். ஐபோன் 14 மாடலில் நீங்கள் 20 மணிநேரம் தொடர்ந்து வீடியோவை பார்க்கலாம், அதுவே ஐபோன் 14 பிளஸ் மாடல் என்றால் 26 மணிநேரம் வரை நீடிக்கும். ஐபோன் 14 மாடலை விட ஐபோன் 14 பிளஸ் பேட்டரி அதிக நேரம் தாக்குப்பிடிக்கும்.
A15 Bionic சிப் மற்றும் 12 மெகாபிக்சல் இரட்டை அமைப்பு கேமரா உள்ளிட்ட மற்ற அம்சங்கள் அனைத்தும் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மொபைல்களில் ஒன்றாகவே இருக்கும். எனவே, உங்களுக்கு ஏற்றதை நீங்கள் ஆர்டர் செய்துகொள்ளவும்.