Health Tips: யூரிக் அமில அளவை சிம்பிளா குறைக்கும் சூப்பர் காய்கள்
உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், அது பல வித உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகையால் இதை அவ்வப்போது பரிசோதித்து இதை கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இரத்த சர்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் போலவே யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கும் சத்தான காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தக்காளியை உட்கொள்வது நமது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. தக்காளியை உட்கொள்வதால் யூரிக் அமில பிரச்சனையை தவிர்க்கலாம்.
கேரட்டில் வைட்டமின் சி உள்ளது. இது அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. கேரட்டை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நம் உடலில் உள்ள யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் ஆண்டிஆக்சிடெண்டுகள் இதில் உள்ளன.
யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதில் பச்சைக் காய்கறிகள் மிக பயனுள்ளதாக இருக்கும். இவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். கீரை, பீன்ஸ், ப்ரோக்கோலி ஆகிய காய்கள் இதில் அடங்கும்.
கோவக்காய் உட்கொள்வது அதிகரிக்கும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
வைட்டமின் சி மற்றும் பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பூசணிக்காயில் யூரிக் அமிலத்தை அகற்ற உதவும் பண்புகள் உள்ளன. பூசணிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் லுடீன் ஆகியவை யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை