கொழுப்பு கரைய... தொப்பை குறைய... உதவும் சூப்பர் டீடாக்ஸ் பானங்கள்
Weight Loss Drink: ஆண்கள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் என்று பலருக்கும் ஒரே பிரச்சினையாக இருப்பது அதிகப்படியான உடல் எடை தான். ஆனால் உடல் எடை குறைக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். அந்த வகையில் உடலில் கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட பானங்கள் உடல் பருமனை குறைக்க வல்லவை.
டீடாக்ஸ் பானங்கள்: குடலில் தங்கி உள்ள கழிவுகளை அவ்வபோது சுத்தமாக வெளியேற்ற வேண்டியது அவசியம். இல்லை என்றால், உடல் எடை குறையாது. உடலில் இருந்து கழிவுகள் வெளியேறினால், உடல் பருமன் குறையும்.
சீரக நீர்: அகத்தை சீராக்கும் சீரகம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீர் காலையில் அருந்துவதால், வளர்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, அதிக கலோரிகளை எரித்து, உடலுக்கு ஆற்றலை கொடுக்கும். சீரகத்தை அதை காலையில் கொதிக்க வைத்த பிறகு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் மேலும் பலன் கிடைக்கும்.
துளசி நீர்: ஆயுர்வேதத்தில் முக்கியத்தும் பெற்ற துளசி ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதோடு அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக காணப்படுகின்றன. துளசி இலைகளை பொடியாது நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அதில் சிறிது தேன் கலந்து அருந்தினால், உடல் கழிவுகள் அனைத்தும் நீங்கி கொழுப்பு கரையும்.
இஞ்சி - எலுமிச்சை நீர்: ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இஞ்சி, வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை சேர்த்து தயாரித்த டீடாக்ஸ் பானம் கொழுப்பைக் கரைப்பதுடன், உடலில் கழிவுகளை வெளியேற்றி சருமத்திற்கு பொலிவையும் தருகிறது. இதனை தேன் சேர்த்து அருந்தலாம்.
இலவங்கப்பட்டை நீர்: வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் இலவங்கப்பட்டையை இரவில் தண்ணீரில் காலையில் அதை குடிக்கலாம். அல்லது இலவங்க பட்டை தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்துவதால், தொப்பை கொழுப்பு வேகமாக கரையும்.
நம்மில் பலருக்கு சோடா பானங்கள், செயற்கை பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும். அதில் இருப்பதெல்லாம் அளவுக்கு அதிகமான சர்க்கரை மற்றும் கலோரி மட்டுமே. எனவே, அதனை தவிர்த்து, வளர்சிதை மாற்றத்தை தூண்டி, செரிமானத்தை மேம்படுத்தும் பானங்களை உட்கொள்வதினால், உடல் பருமன் குறையும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.