ஒரேயடியாய் எகிறும் கொலஸ்ட்ரால் அளவை மாயமாய் குறைக்கும் மஞ்சள் பழங்கள்
கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதால் எடை அதிகரிப்பு, தொப்பை கொழுப்பு, இதய பிரச்சினைகள், இரத்த அழுத்தம் ஆகிய பிற நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன. நீண்ட காலத்திற்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் அது பல பிரச்சனைகளை உண்டாக்கும்
இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது நல்லது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் மஜ்சள் நிற பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சையில் உள்ள என்சைம் மற்றும் பிற பண்புகள் உடலுக்கு கொலஸ்ட்ராலை எதிர்த்து போராடும் ஆற்றலை அளிக்கின்றனர். மற்ற புளிப்பு பழங்களைப் போலவே இதிலும் பலவிதமான வைட்டமின்கள் உள்ளன. ஆகையால் இது எல்டிஎல் கொலஸ்ட்ராலை குறைப்பதில் உதவும்
உயர் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு பேஷன் பழம் ஒரு நல்ல தேர்வாக பார்க்கப்படுகின்றது. இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உயர் கொலஸ்ட்ரால் உள்ள நோயாளிகளுக்கு வாழைப்பழம் சிறந்த பழமாக கருதப்படுகிறது. இதில் அதிக அளவு போட்டாஷியம் உள்ளது. மேலும் வாழைப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. பசியை கட்டுப்படுத்துவதிலும் இது உதவுகிறது. அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் ப்ரோமலைன் என்ற விசேஷ பண்பு உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் உடலுக்கு உதவியாக இருக்கிறது. இது தவிர அன்னாசிப்பழத்தில் வைட்டமின்களும் அதிகமாக உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
பலவித வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பப்பாளி பழம் இரத்தத்தில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும். பப்பாளியில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு மற்றும் யூரிக் அமிலம் என அனைத்தையும் கட்டுப்படுத்த உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.