உடல் பருமன் குறைய... கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட ஜீரோ கலோரி உணவுகள்
உடல் பருமனை குறைக்க, டயட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் ஜீரோ கலோரி உணவுகள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். உடல் எடையை குறைக்க உதவும் ஜீரோ கலோரியுடன் அதிக நார்சத்து கொண்ட உணவுகள் சிலவற்றை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
வெள்ளரிக்காய் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெள்ளரிக்காயில் 96% நீர் உள்ளது. உங்கள் உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது குறைந்த கலோரி மற்றும் அதிக நீர் சத்து கொண்டது. தக்காளியில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.
ப்ரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் கலோரிகள் குறைவு மற்றும் எடை குறைக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
எடை இழப்புக்கு ஆப்பிள் மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது. ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும்.
முள்ளங்கியில் மிகக் குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முள்ளங்கியில் காணப்படும் சில கூறுகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன.
உடல் பருமனை குறைக்க, மேலே குறிப்பிட்டுள்ள, குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை, உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டால், நல்ல பலனை காணலாம். அதோடு உணவில், அரிசி மற்றும் கோதுமையின் அளவை குறைத்துக் கொண்டு, காய்கறிகளின் அளவை கூட்டுவதால் நல்ல பலன் தெரியும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.