பாரதி ஏர்டெல் ரூ.456 திட்டம் vs ரிலையன்ஸ் ஜியோ ரூ 447 திட்டம்
கொரோனா காலத்தில், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான மலிவான திட்டங்களை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. இந்த திட்டங்களில், DATA முதல் தொடங்கி காலிங்க, மெசேஜ் என பல வகையான நன்மைகள் வழங்கப்படுகின்றன.
பாரதி ஏர்டெல் ரூ.456 திட்டம்: ஏர்டெல் நிறுவனம் (Airtel Prepaid Plans) புதிதாக வெளியிட்டுள்ள ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மொத்தமாக 50 ஜிபி டேட்டா நன்மையைத் தினசரி வரம்பு இல்லாமல் வழங்குகிறது. ஏர்டெலின் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு இலவச நன்மைகள் கிடைக்கும்.
பாரதி ஏர்டெல் ரூ.456 திட்டம்: இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக், ஷா அகாடமியில் ஒரு வருடத்திற்கு இலவச கோர்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மற்றும் ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் உள்ளிட்ட ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது. மேலும் இதில் அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் பதிப்பின் ஒரு மாத இலவச சோதனையையும் பயனர்கள் பெறுகிறார்கள்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ447 திட்டம்: ஜியோவிலிருந்து கிடைக்கும் ரூ.447 திட்டமும் 50 ஜிபி அளவிலான டேட்டாவை, 60 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ், வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் தினமும் இலவச 100 எஸ்எம்எஸ்களுடன் வழங்குகிறது. இத்துடன் JioCloud, JioCinema, JioSecurity, JioTV, மற்றும் JioNews போன்ற பிற நன்மைகளும் உள்ளன.