குறையாத அழகில் சிக்குனு இருக்கும் பாவனாவின் WoW புகைபடங்கள்..!
இவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஹோம்லி லுக் ஸ்டில்ஸை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர், சில நடிகைகள். அவர்களில் பாவனாவும் ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்டிருந்த போட்டோஸ், ரணகளமாக வைரலான நிலையில், இப்போது புதிய கொள்ளை அழகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், எதிரி, தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் மலையாள நடிகை பாவனா, தெலுங்கிலும் நடித்திருக்கிறார். இப்போது கன்னடப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்துக்குப் பிறகு அதிகம் நடிக்காமல் இருந்த பாவனா, இப்போது பிசி.
கன்னடத்தில் இவர் நடித்த ரோமியோ என்ற படத்தை தயாரித்த நவீனுடன் பாவனாவுக்கு காதல் ஏற்பட, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். இப்போது கன்னடத்தில் நடித்து வரும் அவர், இன்ஸ்பெக்டர் விக்ரம், சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2, கோவிந்தா கோவிந்தா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
பாவனா, இப்போது வெளியிட்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. பல நெட்டிசன்ஸ், சேச்சி, தமிழ்ல உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் என்று கூறியுள்ளனர். ஹாய் சொல்லுங்க என்ற கேட்ட பலருக்கு தாராளமாக வந்து பதில் சொல்லி இருக்கிறார், நடிகை பாவனா.
சில நெட்டிசன்ஸ், நீங்க சும்மாவே செம அழகு, உங்களுக்கு எதுக்கு மேக்கப்? அது இல்லாத போட்டோவை போடுங்க என்று கூறியுள்ளனர். உங்களுக்கு மேக்னட் கண்கள் என்றும் இதே போல கண்கள் யாருக்கும் அமையாது என்றும் சிலர் வர்ணித்துள்ளனர்.