சிவனும் சனியும் சேர்ந்து அருள்பொழியும் அபூர்வ யோகம்: ஆகஸ்ட் வரை 4 ராசிகளுக்கு கொண்டாட்டம்
)
அபூர்வ நிகழ்வு: சாவன் மாதம் மங்களகரமானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இப்படி சாவன் மாதம் அதிக நாட்களை கொண்டிருக்கும் நிகழ்வு 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது.
)
இந்த நேரத்தில் ஜோதிட சாஸ்திரத்தின்படி மிகவும் விசேஷமான ஒரு நிகழ்வும் உருவாகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த புனித காலத்தில் சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருப்பார். இதன் காரணமாக, இந்த காலத்தில் சிவபெருமான மற்றும் சனி பகவானின் சிறப்பு அருள் ஒன்றாக கிடைக்கும்.
)
ராசிகளில் இதன் தாக்கம்: இந்த அபூர்வ அமைப்பின் பலன் அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும் என்றாலும், 4 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 59 நாட்களுக்கு சிறப்பு பலன்களை அளிப்பார். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 59 நாட்கள் அற்புதமாக இருக்கப் போகின்றன. இவர்கள் வேலை-வியாபாரத்தில் வலுவான வெற்றியைப் பெறலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். ஆகஸ்ட் 31 வரையிலான காலம் இவர்களுக்கு மரியாதை மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் பல நன்மைகளைத் தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நன்றாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளிடம் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். சனி பகவான் மற்றும் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். புதிய வேலைகளைத் தொடங்கலாம். திருமண வாழ்வில் இருந்த டென்ஷன் விலகும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் அருள்மழை பொழிவார். உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். புதிய வேலை கிடைக்கும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வருமானத்தில் அதிகரிப்பு இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.