சனியை தொடர்ந்து குரு வக்ர பெயர்ச்சி ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம்

Tue, 18 Jul 2023-4:58 pm,

குரு வக்ர பெயர்ச்சி காலம்: செப்டம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை வக்ர கதியில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார்.

 

மேஷ ராசி: குரு வக்ர பெயர்ச்சி அடையும்போது மேஷ ராசிக்கு நல்ல இடமாற்றத்தைக் கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் என அனைத்தும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

 

ரிஷப ராசி: குரு வக்ர பெயர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும். பண வரவை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தைக் கொடுக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

 

மிதுன ராசி: குரு வக்ர பெயர்ச்சி மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். புதிய முதலீடுகள் அதிக லாபத்தைத் தரும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தொட்டதெல்லாம் வெற்றியாக அமையும்.

சிம்ம ராசி: குரு வக்ர பெயர்ச்சியால் சகல விதமான நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும். கல்வியிலிருந்த தடைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். மற்றவர்களை நம்பி களத்தில் இறங்க வேண்டாம்.

துலாம் ராசி: குரு வக்ர பெயர்ச்சியால் உங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக அமையும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய பொறுப்புகளால் வெற்றி பெறுவீர்கள். நினைத்த காரியம் நடக்கும்.

தனுசு ராசி: குரு வக்ர பெயர்ச்சியால் உங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய வேலை கிடைக்கும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில், பதவி உயர்வு கிடைக்கும். சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வேலை செய்யும் இடத்திலிருந்த சிக்கல்கள் நீங்கும்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link