புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Fri, 14 Jun 2024-6:08 am,

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

கிரகங்களின் இளவரசரான புதன் ஜூன் 14, அதாவது இன்று தனது ராசியை மாற்றவுள்ளார். புதன் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆவர். அடுத்த சுமார் 15 நாட்களுக்கு இவர் மிதுன ராசியில் இருப்ப்பார். 

புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

மேஷம்: புதன் பெயர்ச்சி மேஷ ராசியில் நல்ல பலனைத் தரும். இந்த ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மை அடைவார்கள். வேலைத் துறையில் வெற்றி பெறுவார்ர்கள். பண வரவு அதிகமாகும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். 

 

மிதுனம்: ஜூன் 14 இரவு, புதன் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதன் தாக்கம் காரணமாக மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை முன்னேறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

கன்னி: புதன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலம் நன்றாகவே இருக்கும். உங்களின் பொன்னான காலம் தொடங்கப் போகிறது. புதன் அருளால் உங்கள் நிதி நிலை மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் உங்கள் பெயர் உயரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் நல்ல காலம் ஆரம்பம் ஆகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். விரைவில் வெளியூர் பயணம் செல்வீர்கள். சமூகத்தில் செல்வமும் மரியாதையும் அதிகரிக்கும்.

தனுசு: புதன் பெயர்ச்சியால் உங்கள் நிதி நிலை மேம்படும். சமூகத்தில் மக்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிக்க வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கைகூடும். படிக்கும் மாணவர்களுக்கும் பொற்காலம் வரப்போகிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link