தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தித்திக்கும் தீபாவளி... சனி அருளால் பணம், பதவி, புகழ், அனைத்தும் கிட்டும்

Fri, 25 Oct 2024-2:12 pm,

அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிராமமாக கருதப்படுகிறார். மிகவும் மெதுவாக நகரும் இவர் ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டு காலம் இருக்கிறார். இதனால் ராசிகளில் சனி பகவானின் தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.

 

சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு பிறகு அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவர் கும்ப ராசியிலேயே வக்கிர நிவர்த்தி அடைவார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

 

இந்த ஆண்டு தீபாவளிக்கான திதி அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 என இரு நாட்களிலும் இருக்கின்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு,  தீபாவளி பண்டிகை அமையும் இரண்டு நாட்களிலும் நீதியின் கடவுளான சனி பகவான் தனது ராசியான கும்பத்தில் சஞ்சரித்திருப்பார். இது மிகவும் சக்திவாய்ந்த 'ஷஷ ராஜயோகத்தை' உருவாக்கும். இது தவிர, புதனும் சுக்கிரனும் விருச்சிக ராசியில் செல்வத்தையும், நற்பலன்களையும் தரும் லக்ஷ்மி நாராயண யோகத்தை உருவாக்குவார்கள். 

 

சனி வக்கிர நிவர்த்தி, ஷஷ ராஜயோகம், லஷ்மி நாராயண யோகம் மற்றும் பிற யோகங்க்களின் தாக்கம் தீபாவளிக்கு பிறகு அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இங்கே காணலாம்.

 

மேஷம்: சஷ மற்றும் லக்ஷ்மி நாராயண யோகத்தின் பலன் காரணமாக, மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் மூலம் அதிக லாபம் காணலாம். பல வித வெற்றிகள் குவியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.

 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி வக்கிர நிவர்த்தி காரணமாக அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது நடந்து முடியும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பொருளாதார நிலை மேம்படும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

 

சிம்மம்: தீபாவளியில் உருவாகும் யோகங்களால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும். நிதி ஆதாயம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான பணி பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

 

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் பலவித நற்பலன்களை கொண்டு வரும். இந்த நேரம் இவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். நீண்ட நாட்களாக வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு இப்பொழுது தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பண வரவு அதிகரிப்பதால் பொருளாதார நிலை மேம்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும்.

 

மகரம்: சனி வக்கிர நிவர்த்தி மகர ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி சாதகமாக அமையும். கடிமாக உழைத்து இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் விரிவடைந்து லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.  

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link