குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்... வெற்றிகள் குவியும்
அனைத்து கிரகங்களும் பல வித மாற்றங்களுக்கு உட்பட்டாலும், குரு பகவான் மற்றும் சனி பகவானின் மாற்றங்கள் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. குரு பெயர்ச்சிக்கும், சனி பெயர்ச்சிக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் விசேஷ சிறப்புள்ளது.
குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். திருமணம், குழந்தைகள், கல்வி, செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் குரு பகவான். ஒருவர் மீது குரு பார்வை பட்டால், அவரது வாழ்வில் பல நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன.
குரு பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார்.
குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உருவாகும். இவர்களது வழ்வில் குரு அருளால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
குரு அருளால் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் மூலம் லாபம் கிட்டும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாட்டில் படிப்பதற்கான முயற்சிகள் அல்லது வெளிநாட்டு குடியுரிமைக்கான முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
குரு பெயர்ச்சியின் தாக்கத்தால், ரிஷப ராசிக்காரர்களுக்கு இது பொற்காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் பல நல்ல பலன்களைப் பெறுவீரகள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை செய்யும் விதம் மேம்படும். உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் தேவைகள் எளிதில் நிறைவேறும்.
குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரபலங்களின் தொடர்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில் குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து வருமானம் உயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
குரு பகவான் கடக ராசியில் இருந்து 11வது இடத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் முதலீடு லாபகரமாக இருக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.மற்றவர்களுக்கு உதவவும் தயாராக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில், அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
குரு பகவானின் அருள் பெற, 'குரவே சர்வ லோகானாம், பிஷஜே பவ ரோகினாம் நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.