ராகுவின் அருளால் இந்த ராசிகளுக்கு அக்டோபர் வரை ராஜயோகம்: திகட்ட திகட்ட மகிழ்ச்சி!!
மெதுவாக நகரும் கிரகம்: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். சனிக்குப் பிறகு ராகு மிக மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை ராகு தனது ராசியை மாற்றுகிறார்.
ராகு கேது: ராகு மற்றும் கேது முக்கிய கிரகங்களாக கருதப்படவில்லை என்றாலும், அவை நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ராகு எப்போதும் மோசமான பலன்களைத் தருவதில்லை. ஒரு நபரின் ஜாதகத்தில் அவர் வலுவான நிலையில் இருந்தால், அந்த நபரின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
ராசிகளில் இதன் தாக்கம்: மேஷ ராசியில் ராகு இருப்பதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் சில ராசிக்கார்ரகளுக்கு ராகுவின் அருளால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கும்பம்: இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். எனவே, இவர்களின் நம்பிக்கை இந்த காலத்தில் மிக அதிகமாக இருக்கும். வியாபாரத்தை முன்னேற்ற புதிய வழிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமின்றி வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்: ராகு பெயர்ச்சி ஆன பிறகு விருச்சிக ராசியின் ஆறாம் வீட்டில் வந்து குடியேறியுள்ளார். ஆகையால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். செயல்திறன் நன்றாக இருக்கும், இதனால் பதவி உயர்வுடன் சேர்த்து ஊதிய உயர்வும் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
சிம்மம்: இந்த ராசிக்கு 10ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் உத்தியோகத்தில் பல நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொரு இலக்கையும் எளிதாக அடைவீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். பயணங்கள் செல்வதால் அதிக செலவு ஏற்படும்.
கடகம்: கடக ராசிக்காரர்களின் கர்மபாவத்தின் 10ஆம் வீட்டில் ராகு அமர்ந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் பண பலன்கள் கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணத்தில் இருந்தால் அதிக பலன் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.