பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது... திடீர் Logout - என்ன பிரச்னை?
சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்று உலகம் முழுவதும் முடங்கி உள்ளது.
பேஸ்புக் இணையதளம், செயலி, அதன் Messenger செயலி, இன்ஸ்டாகிராம் செயலி, சமீபத்தில் X தளம் போன்று மெட்டா அறிமுகப்படுத்திய Threads செயலி ஆகியவை முடங்கியிருப்பதாகவும் தெரிகிறது.
மேலும், பேஸ்புக் பயனர்கள் தங்களின் கணக்கு தானகவே Logout ஆகிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். "session expired, please log in again" என்று திரையில் காட்டப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், மீண்டும் லாக்-இன் செய்ய முயற்சித்தாலும் பேஸ்புக் கணக்கை லாக்-இன் செய்ய முடியவில்லை என தெரிகிறது.
அதாவது, லாக்-இன் செய்ய பாஸ்வேர்டை உள்ளீடு செய்தாலும், பாஸ்வேர்டு தவறு என்றே காட்டுவதாக பயனர்கள் கூறுகின்றனர்.
இந்திய நேரப்படி, இரவு 8.30 மணிக்கு மேல் இந்த பிரச்னை எழுந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, X (Twitter) தளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது குறித்து பதிவிட்டு வருகின்றனர். இதுவரை அதிகாரப்பூர்வமாக மெட்டா தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, மெட்டா சிஇஓ மார்க் சக்கர்பெர்க்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.