டிசம்பர் 24-ல் நேரடியாக OTT-யில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள்!

Thu, 09 Dec 2021-5:38 pm,

அத்ராங்கி ரே (AtrangiRe) :

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இசை ரீதியான ரொமான்டிக் படம் தான் "அத்ராங்கி ரே (AtrangiRe)".  இப்படத்தில் அக்ஷய் குமார், தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் டிசம்பர்  24-ம் தேதி Disney+ Hotstar இயங்குதளத்தில் ரிலீசாகிறது.

மின்னல் முரளி (Minnal Murali) :

பசில் ஜோசப் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் "மின்னல் முரளி (Minnal Murali)".  இப்படத்தை சோபியா பால் தயாரிக்கிறார்.  கடந்த ஆண்டு ரிலீசாக வேண்டிய இந்த படம் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இப்படம் டிசம்பர்  24-ம் தேதி  Netflix இயங்குதளத்தில் ரிலீசாகிறது.

டோன்ட் லுக் அப் (Dont look up ) :

ஆடம் மெக்கே இயக்கத்தில் உருவான நகைச்சுவை கலந்த அறிவியல் தொழிநுட்பம் சார்ந்த படம் தான் "டோன்ட் லுக் அப் (Dont look up )".  பூமியை அளிக்க வரும் ஆபத்தை மக்களுக்கு எடுத்து சொல்ல பாடுபடும் சிலரை பற்றி இப்படம் அமைந்துள்ளது.  இப்படத்திற்கு பல கலவையான விமர்சங்கள் கிடைத்துள்ளது.  இந்த திரைப்படம் டிசம்பர் 24-ம் தேதி  Netflix இயங்குதளத்தில் ரிலீசாகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link