ஆகஸ்ட் மாதத்தில் நடக்க உள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகள்: இந்த ராசிக்கு அதிர்ஷ்டம்

Sun, 17 Jul 2022-3:12 pm,

ஆகஸ்ட் மாதத்தில் முதல் பெயர்ச்சி 9 ஆம் தேதி 2022 அன்று நடைபெறும். இந்த நாளில் புதன் கிரகம் சிம்ம ராசியில் பெயர்ச்சியாகும். மறுபுறம், இரண்டாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 11 தேதி ஆவணி அவிட்டம் அன்று நடைபெறும். இதில் சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சியாவார். இதனுடன், சூரியனின் ராசி மாற்றத்தால் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது மற்றும் கடைசிப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நாளில் சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகுகிறார். 

மிதுனம் - ஆகஸ்ட் மாதப் பெயர்ச்சியின் தாக்கம் மிதுன ராசியினரின் வாழ்க்கையில் காணப்படும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இதன் போது வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். அதே சமயம் ஆகஸ்ட் மாதம் புதன், சுக்கிரன், சூரியன் பெயர்ச்சி செய்வதால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பணியிடத்தில் இருக்கும் எதிரிகள் உங்களுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்த முடியாது. அதுமட்டுமின்றி சமூகத்தில் கௌரவமும் உயரும். மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.

துலாம்   - ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ராசிக்காரர்களுக்கு வேலை செய்பவராக இருந்தால் கிரகங்களின் பெயர்ச்சி இவர்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியில் நல்ல லாபம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதே சமயம் அரசுப் பணிகளில் ஈடுபடும் இந்த ராசிக்காரர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

சிம்மம்   - சிம்ம ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதம் மூன்று கிரகங்களின் பெயர்ச்சியால் பலன் அடையப் போகிறார்கள். இதன் போது சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் அனைத்துப் பணிகளையும் முடிப்பீர்கள். இதுமட்டுமின்றி வியாபாரிகளுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். இதன் போது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பெருகும். இந்த பெயர்ச்சிகள் உங்களுக்கு மனநிறைவைத் தரும். 

 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link