Zodiac Compatibility: எதிரெதிர் துருவமா இருந்தா என்ன? காதல்ல ஒத்துப்போகுமே

Virgo and Pisces: ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் ஒத்துப்போகும், சில என்றுமே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால் எதிரெதிராக இருந்தாலும் காதலில் மட்டும் ஒத்துப்போகும் கலக்கல் காம்பினேஷன் இது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2022, 11:31 PM IST
Zodiac Compatibility: எதிரெதிர் துருவமா இருந்தா என்ன? காதல்ல ஒத்துப்போகுமே title=

புதுடெல்லி: கன்னி மற்றும் மீனம் ராசிகள், இயல்பாகவே ஒன்றுக்கொன்று, எதிர் எதிர் நிலையில் இருந்தாலும் ஒன்றையொன்று பரஸ்பரம் ஈர்க்கும் ராசிகள் ஆகும்.

கன்னி மற்றும் மீனம் இரண்டுமே தனித்துவமான ஆளுமைகள் கொண்ட ராசிகள். ஆனால், இந்த அசாதாரண ராசியினர் ஜோடியாக இணைந்தால் எப்படி இருக்கும்? அவ்வப்போது பிணங்கினாலும் இணக்கத்துடனே இருக்குமாம். தன்மையைப் படியுங்கள்.

காதல் மற்றும் பாலியல் ரீதியாகப் பழக முடியுமா என்பதை ஜோதிடப் பொருத்தம் மூலமும் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன், சந்திரன், வெள்ளி, செவ்வாய் ஆகியவை ஒருவரின் வாழ்க்கையில் இணக்கமாக பொருந்தக்கூடிய தன்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கன்னியும் மீனமும் சேர்ந்தால் என்ன நடக்கும்?
ஒரு பக்கம் பூமி, மறுபக்கம் தண்ணீர்? விளைவு ஆச்சரியமாக இருக்கும். இல்லையா? பூமி எப்படி தண்ணீரோடு வேறுபட்டாலும், தன்னுள் ஒன்றாக தண்ணீரை வைத்திருக்கிறதோ அதே போல, கன்னி மற்றும் மீனம் ராசிகள் அடிப்படையில் வேறுபட்டாலும், ஒன்றுக்கு மற்றொன்று இணக்கமானதாக இருக்கின்றன.  

மேலும் படிக்க | ஜூலையில் 5 கிரகங்களில் மாற்றம்: சிலருக்கு அலுகூலம், சிலருக்கு ஆபத்து 

கன்னி ஒரு பரிபூரணவாதியாக நன்கு அறியப்பட்டவர், அவர் ஒழுக்கம் இல்லாமல் செயல்பட முடியாது. மீனம், ஓரளவு கணிக்க முடியாததாக இருக்கலாம். இது மட்டுமின்றி, கன்னி ராசிக்காரர்கள் சில சமயங்களில் கடுமையானவர்களாக இருப்பார்கள், குறிப்பாக அவர்கள் விரும்பும் நபர்களிடம் கடுமை காட்டும் போக்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.

பிற ராசிகளுடன் ஒப்பிடும்போது மீனம் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியது. இப்படி பல அடிப்படை வேறுபாடுகள் இருந்தாலும், கன்னி மற்றும் மீனம் ராசிகளுக்கு இடையிலான உறவு மிகவும் அற்புதமானது.

இது ஒரு அற்புதமான, ஆன்மிக, மற்றும் மேம்படுத்தும் இணைப்பு. அவர்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் கனவுகளை யதார்த்தமாக மாற்றும் திறன்களைக் கொண்டுள்ளனர். 

கன்னி மற்றும் மீனம் இடையே நம்பிக்கை 
கன்னி ராசியினருக்கு இருக்கும் அவநம்பிக்கையை சமாளிக்க மீனம் உதவாது. அவர்கள் இருவரும் போதுமான நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும், இருவரும் ஒருவரையொருவர் நம்பும் ஒரு நல்ல தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த ஜோடிகள், ஒருவித ரகசியத்தைப் பேணுவது, தங்கள் உறவை மீண்டும் எழுப்பி வலுப்படுத்தக்கூடும் என்பதை புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்.

 

கன்னி மற்றும் மீனம் இடையே தொடர்பு மற்றும் அறிவுத்திறன் 
இது மற்ற ராசியிலிருந்து வேறுபட்ட ஜோடி. நிச்சயமாக, அவர்கள் ஒருவரையொருவர் பூர்த்தி செய்வதற்கான மிகச் சிறந்த வழி, தகவல் தொடர்பு மற்றும் அறிவுத்திறன் மூலம் அல்ல. அவர்கள் மற்றவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாகத் தோன்றலாம்.

கன்னி மற்றும் மீனம் இடையே பாலியல் இணக்கம்
கன்னி மற்றும் மீனம் தங்கள் கூட்டாளிகளுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள் மற்றும் பாலியல் ரீதியாக ஒத்த உணர்வுகள் மற்றும் ஆசைகளை கொண்டிருப்பார்கள். கன்னி மிகவும் பழமைவாத சிந்தனைகள் கொண்டவராகவும், படுக்கையில் கட்டுப்பாடானவராகவும் இருக்கலாம்,

ஆனால் மீனம் மகிழ்ச்சியைத் தேடும் என்பதோடு, பாலுறவை அன்புடன் இணைக்கிறது. இருவரும் முன்முயற்சி எடுக்க விரும்பவில்லை; முதலில் கொஞ்சம் குழப்பமாகவோ அல்லது தயக்கமாகவொ உணரலாம்.

இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்த பிறகுதான்  உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் திருப்திகரமான அனுபவமாக இருக்கும். அவர்கள் இருவரும் ஆன்மீக மற்றும் ஆத்மார்த்தமான உறவைத் தேடுகிறார்கள், வெறுமனே உடல் உறவை இந்த இரு ராசியும் தேடுவதில்லை.  

 

கன்னி மற்றும் மீனம் இடையே உணர்ச்சிகள்
கன்னி மற்றும் மீன ராசியினருக்கு இடையிலான புரிதல் நிலை முழுமையை அடையக்கூடும், இந்த புரிதல் அவர்களுக்கு வேறு ராசியினரும் வராது.  

மீனம் மற்றும் கன்னி சேர்ந்தால் மதிப்பெண் எதற்கு எவ்வளவு கொடுக்கலாம்?

காதல் மதிப்பெண்: 60 சதவீதம்
திருமண மதிப்பெண்: 60 சதவீதம்
பாலியல் மதிப்பெண்: 70 சதவீதம்

கன்னி மற்றும் மீனம் ராசியை சேர்ந்தவர்கள் மிகவும் சவாலான கூட்டாளிகள் மற்றும் மிகவும் அன்பான தம்பதிகள். வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் வெவ்வேறு கண்ணோட்டங்கள் காரணமாக அவர்களுக்கு இடையே பல சர்ச்சைகள் இருக்கலாம், ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்த ஜோடிகளுக்கு இடையிலானது தான் என்பது பிளஸ் பாயிண்ட்  ஆகும்.

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News