அஸ்வினை அடுத்து ஓய்வை அறிவிக்கும் இந்த 5 வீரர்கள்... ரோஹித், கோலி, ஜடேஜா இல்லை!!
இந்திய அணி தற்போது டெஸ்ட் அரங்கில் பெரும் மாற்றத்தை சந்திக்க காத்திருக்கிறது. பேட்டிங் முதல் பந்துவீச்சு வரை பல மூத்த வீரர்கள் ஓய்வு பெற இருக்கின்றனர். பல்வேறு இளம் திறமைகள் அணிக்குள் வர இருக்கின்றனர்.
அடுத்த 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் போது, இந்திய அணியின் இந்த 5 மூத்த வீரர்கள் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உமேஷ் யாதவ்: 37 வயதான உமேஷ் யாதவ் (Umesh Yadav) கடைசியாக 2023ஆம் ஆண்டு ஜூனில் நடைபெற்ற WTC இறுதிப்போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் விளையாடவில்லை. 57 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை எடுத்திருக்கும் இவரும் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.
இஷாந்த் சர்மா: 36 வயதான இஷாந்த் சர்மா (Ishant Sharma) இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 2021ஆம் ஆண்டுக்கு பின் இவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத நிலையில், இவரும் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவனேஷ்வர் குமார்: 34 வயதான புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) 21 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி 63 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இவரும் 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காத நிலையில் விரைவில் இவரும் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜிங்கயா ரஹானே: 36 வயதான அஜிங்கயா ரஹானே (Ajinkya Rahane) இதுவரை 85 போட்டிகளில் விளையாடி 5077 ரன்களை குவித்துள்ளார். அதில் 12 சதங்கள், 26 அரைசதங்கள் அடக்கம். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் அணியில் இடம்பெறவில்லை. இவரும் விரைவில் ஓய்வை அறிவிக்கலாம்.
செதேஷ்வர் புஜாரா: 36 வயதான செதேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 7195 ரன்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்கள், 35 அரைசதங்கள் அடக்கம். இவரும் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த WTC இறுதிப்போட்டிக்கு பின்னர் அணியில் இடம்பிடிக்கவில்லை. எனவே இவரும் விரைவில் ஓய்வை அறிவிக்கலாம்.
ஒருவேளை, இந்திய அணி வரும் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாவிட்டால் ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி (Virat Kohli), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஆகியோரும் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது.