ஏப்ரல் 1 முதல் NPS, EPF, ITR மற்றும் க்ரிப்டோ வரி விதிப்பில் பெரிய மாற்றங்கள்: விவரம் இதோ

Fri, 01 Apr 2022-5:43 pm,

ஏப்ரல் 1 முதல், மாநில அரசு ஊழியர்கள் இப்போது NPS பங்களிப்புக்கு அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி ஆகியவற்றில் 14% வரை பிடித்தம் செய்ய முடியும்.

2021-22 நிதியாண்டு மற்றும் அதன் பிறகு, இபிஎஃப் கணக்கில் ஒரு ஊழியரின் பங்களிப்பு ரூ. 2.50 லட்சத்தைத் தாண்டியிருந்தால், இப்போது அவர் செலுத்திய பங்களிப்பின் மீதான வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். புதிய இபிஎஃப் இனி இந்த விதியுடன்தான் தொடங்கப்படும்.

அசல் ஐடிஆரைத் தாக்கல் செய்யும் போது ஏற்படும் பிழைகள் மற்றும் தவறுகளுக்கு வரி செலுத்துவோர் இப்போது புதுப்பிக்கப்பட்ட ஐடிஆர் பதிவு செய்யலாம். தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் ஐடிஆர்-ஐ புதுப்பிக்கலாம்.

வர்சுவல் டிஜிட்டல் சொத்துகள்/கிரிப்டோ கரன்சி மூலம் ஏற்படும் லாபங்களுக்கு 30% வருமான வரி விதிக்கப்படும். 

டைம் டெபாசிட், மாதாந்திர வருமானத் திட்டம் அல்லது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற அஞ்சல் அலுவலக சிறு சேமிப்புத் திட்டத்தில் வட்டித் தொகையைப் பெற்றால், அது இனி பணமாகச் செலுத்தப்படாது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link