ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அட்டகாசமான தீபாவளி போனஸ்... மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Fri, 04 Oct 2024-9:18 am,

ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்!! அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கான போனசுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

11.72 லட்சத்திற்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார். இது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடந்த சிறப்புக் கூட்டத்தில், பெரிய துறைமுக அதிகாரிகளுக்கான திருத்தப்பட்ட உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட வெகுமதி திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2,029 கோடி ஆகும்.

இந்த முடிவால் சுமார் 12 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். ரயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (கார்டுகள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்மேன், மினிஸ்டிரியல் ஊழியர்கள் மற்றும் பிற குழு XC ஊழியர்கள் போன்ற பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.

ரயில்வேயின் செயல்திறனில் முன்னேற்றத்தை நோக்கி உழைக்க ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் PLB அளிக்கப்படுகின்றது. இது பணியாளர்களுக்கு ஒரு ஊக்கமாகவும் எதிர்கால பணிகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையிலும் இருக்கின்றது. 

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக்கு முன் தகுதியான ரயில்வே ஊழியர்களுக்கு PLB பணம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டும், 11.72 லட்சம் நான் - கெசடட் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான PLB தொகை வழங்கப்படுகிறது.

தகுதியான ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக 78 நாட்களுக்கு ரூ.17,951 செலுத்தப்படும். 2023-2024 ஆம் ஆண்டில் ரயில்வேயின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. ரயில்வே 1588 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றிச்செலல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 6.7 பில்லியன் பயணிகள் பிராயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய சாதனையாக கருதப்படும் இந்த செயல்பாட்டிற்கு பல காரணிகள் பங்களித்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வேயில் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட கேபெக்ஸின் உட்செலுத்துதல் காரணமாக ஏற்பட்ட உள்கட்டமைப்பு முன்னேற்றம், செயல்பாடுகளில் செயல்திறன் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் போன்றவை இந்த காரணிகளில் அடங்கும்.

 

7வது ஊதியக் குழு: நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான (Pensioners) அகவிலை நிவாரணம் குறித்த அறிவிப்பும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. எனினும், இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வந்துவிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ (DA) மற்றும் டிஆர் (DR)3%-4% அதிகரிக்கும் என தெரிகிறது. டிஏ உயர்வு (DA Hike) ஏற்பட்டால், மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 53%-54% ஆக அதிகரிக்கும். 

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. துல்லியமான மற்றும் சமீபத்திய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link