ஷ்ரேயாஸ் ஐயருக்கு டாட்டா... இந்தியா தொடரை வெல்ல இந்த பிளேயிங் லெவன்தான் சிறந்தது!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
முன்னர், முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. மீதம் உள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த போட்டிகள் முறையே ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்த இன்று அறிவிக்கப்பட்ட இந்திய ஸ்குவாடை தொடர்ந்து காணலாம்.
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், கேஎல் ராகுல்*, ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்
விராட் கோலி மீதம் உள்ள 3 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சுப்மான் கில்லுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சில் ஆவேஷ் கானிற்கு பதில் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணியின் முக்கிய பிரச்னை விக்கெட் கீப்பர் பேட்டர்தான். கேஎஸ் பரத்திற்கு தொடர்ந்து துருவ் ஜூரேலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதால், அவர்கள் விளையாடாதபட்சத்தில் ராகுலுக்கு பதில் ரஜத் பட்டிதரும், ஜடேஜாவுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரும் இடம்பெறலாம். (புகைப்படம்: துருவ் ஜூரேல்)
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நான்கு ஸ்பின்னர்கள், 1 வேகப்பந்துவீச்சாளர் என இங்கிலாந்து அணியின் ஃபார்மட்டை போன்றும் நீங்கள் செல்லலாம். ஆடுகளம் பெரிய ஒத்துழைப்பை வழங்காத பட்சத்தில் குல்தீப் யாதவிற்கு பதில் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பளிக்கலாம். (புகைப்படம்: ஆகாஷ் தீப்)
பிளேயிங் லெவன் (கணிப்பு): ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுல்*/ரஜத் பட்டிதார், கேஎஸ் பரத்/துருவ் ஜூரேல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர்/ஜடேஜா*, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.