NPS புதிய விதி, மகிழ்ச்சியில் ஊழியர்கள்: ஓய்வூதியத்தில் 40% ஏற்றம், முழு கணக்கீடு இதோ

Thu, 22 Aug 2024-9:24 am,

பணி ஓய்வுக்கு பிறகான நிதி தேவைகளை பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். இதை கருத்தில்கொண்டு பலர் பல்வேறு திட்டங்களில் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்காக பணத்தை சேமிக்கிறார்கள். அந்த திட்டங்களில் தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS மிகச்சிறந்த ஒன்றாக உள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டம் முன்பை விட அதிகப் பலனைத் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு NPS விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு (NPS Subscribers) முன்பை விட அதிகமான பலன்கள் கிடைக்கும். இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம். 

இப்போது இந்த புதிய விதியின் கீழ், தேசிய ஓய்வூதிய அமைப்பில் உள்ள ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 14 சதவீதம் என்பிஎஸ் பங்களிப்பிற்காக பிடித்தம் செய்யப்பட வேண்டும். முன்பு இந்த வரம்பு 10% ஆக இருந்தது. இது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால், இப்போது NPS -க்கான பங்களிப்பு முன்பை விட அதிகரிக்கும்.

இதன் காரணமாக, கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவில் சிறிய வித்தியாசம் ஏற்பட்டு வீட்டுச் செலவுகளில் சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனினும், ஓய்வூதிய அடிப்படையில் இது நன்மை பயக்கும். தேசிய ஓய்வூதிய முறையின் இந்த புதிய விதியைப் பற்றிய அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

ஒரு உதாரணத்தின் மூலம் கணக்கீட்டை புரிந்துகொள்ளலாம். 30 வயதில் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.35000 ஆக இருந்தால், NPS இல் 14 சதவிகிதம் வீதம் ஒவ்வொரு மாதமும் ரூ.4,900 பங்களிக்க வேண்டும். 60 வயது வரை அதாவது 30 ஆண்டுகள் வரை அவர் இந்த பங்களிப்பை செய்தால் அவரது வருமானத்திற்கான கணக்கீடு எப்படி இருக்கும்? அதை இங்கே பார்க்கலாம். 

40% என்பிஎஸ் பங்களிப்புக்கான கணக்கீடு: NPS இல் கணக்கு தொடங்கிய வயது=30, அடிப்படை சம்பளம் - ரூ 35000, அடிப்படை சம்பளத்தில் 14% - ரூ 4900, NPS இல் ஒவ்வொரு மாதமும் முதலீடு - 4900, மதிப்பிடப்பட்ட முதலீட்டு வருமானம் - ஆண்டுக்கு 10%, 30 ஆண்டுகளில் மொத்த முதலீடு - 17,64,000, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த நிதி - ரூ.1,11,68,695, வருடாந்திர தொகை (ஆனுவிட்டி) - 40%, வருடாந்திரத்தில் மதிப்பிடப்பட்ட வருமானம் - ஆண்டுக்கு 8%, 60 வயதில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் - ரூ 29,783

10% என்பிஎஸ் பங்களிப்புக்கான கணக்கீடு: NPS இல் கணக்கு தொடங்கிய வயது - 30, அடிப்படை சம்பளம் - ரூ 40,000, அடிப்படை சம்பளத்தில் 10% - 4000, NPS இல் மாதாந்திர முதலீடு - 4000, மதிப்பிடப்பட்ட முதலீட்டு வருமானம் - ஆண்டுக்கு 10%, 30 ஆண்டுகளில் மொத்த முதலீடு - 14,40,000, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த நிதி - 91,17,302, வருடாந்திர தொகை (ஆனுவிட்டி) - 40%, வருடாந்திரத்தில் மதிப்பிடப்பட்ட வருமானம் - ஆண்டுக்கு 8%, 60 வயதில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் - ரூ 24,313

தேசிய ஓய்வூதிய முறையின் இந்த கணக்கீட்டின்படி, NPS -இல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதிக்குப் பிறகு இப்போது பணியாளர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்கப்படும். புதிய விதிக்குப் பிறகு, ஓய்வூதியத்தில் சுமார் 40 சதவிகித உயர்வு இருக்கும். தேசிய ஓய்வூதிய அமைப்பில் ஓய்வு பெறும்போது பெறப்படும் மொத்த தொகையும் அதிகரித்து கிடைக்கும். புதிய விதிகளின்படி இதில் 40 சதவீதம் அதிகரிப்பு இருக்கும்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டமாகும். இந்த ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வுக்கு பிறகான நிதி பாதுகாப்பை மனதில் கொண்டு முதலீடு செய்யப்படுகிறது. 18 வயது முதல் 70 வயது வரை உள்ள இந்தியர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பில் கணக்கைத் தொடங்கலாம். NRI களும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

NPS கணக்கைத் திறந்த பிறகு, என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) 60 வயது அல்லது முதிர்வு அல்லது 70 வயது வரை இந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் பங்களிக்க வேண்டும். இத்துடன் தேசிய ஓய்வூதிய முறையின் வருமானத்தையும் கவனத்தில் கொண்டால், இப்போது வரை NPS 8% முதல் 12% ஆண்டு வருமானத்தை அளித்துள்ளது. இது ஓய்வு பெற்ற நபருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link