அடேங்கப்பா... ஒரு மொபைலில் 24 GB RAM ஆ... கெத்தாக அறிவித்த Realme!
Realme நிறுவனத்தின் தலைவர் Xu Qi Chase கருத்துப்படி, மிகவும் பிரபலமான Realme GT 5 மாடல் ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
இதுகுறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் RAM குறித்த தகவல் பொதுவில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த மாடல் மொபைல் வெளியிடப்படும் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஸ்மார்ட்போன் 24 GB வரை RAM வசதியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைபேசியின் சார்ஜிங் விவரக்குறிப்புகளுடன், வேறு சில அம்சங்களும் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஊடக அறிக்கைகளின்படி, இந்த மாடல் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான Realme GT 3-இன் மாற்றாக அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
"அடுத்த Realme GT 5 இல் 24GB வரை ரேம் இருக்கும். கூடுதலாக, குவால்காமின் முதன்மையான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC உடன் செயல்படும்" என Realme நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
240W வேகமான சார்ஜிங்கிற்கான ஸ்மார்ட்போனின் ஆதரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், Realme GT 5 மாடல் குறித்த வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.