மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்பு

Sat, 24 Aug 2024-1:59 pm,
Central Government Employees

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme), தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System), 8வது ஊதியக் குழு (8th Pay Commission) ஆகியவற்றை பற்றி பிரதமருடன் விவாதங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Joint Consultative Machinery

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரச ஊழியர் சங்கங்களின் (JCM) பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி நடத்தவுள்ள இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி இந்த கூட்டம் குறித்த தகவலை பணியாளர் அமைச்சகம் தெரிவித்தது.

PM Modi

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, பிரதமர் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள், அதாவது ஜாயிண்ட் கன்சல்டேடிவ் மெஷினரி (JCM)-ஐ சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் OPS, NPS, மற்றும் எட்டாவது ஊதியக் குழு குறித்து விவாதிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​NPS ஐ மேம்படுத்துவது குறித்தும் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து ​​NPS பங்களிப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியத்தில் சுமார் 40% ஏற்றம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான, ஊழியர்களுக்கு ஆதாயங்களை அளிக்கும் மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்கள் காரணமாக ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த பலன்களுக்கு சமமான நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய ஓய்வூதிய முறையை ஆய்வு செய்து அதை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு NPS இன் கீழ் ஓய்வூதிய உத்தரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி தாக்கங்களை மதிப்பிட்டு வருகிறது. சர்வதேச ஓய்வூதிய முறைகள் மற்றும் APGPS, அதாவது, ஆந்திரப் பிரதேச அரசின் ஓய்வூதியக் கொள்கையையும் (Andhra Pradesh NPS model) இந்த குழு ஆய்வு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தற்போது என்பிஎஸ் -இல் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் ஆகிய இரு ஓய்வூதிய முறைகளுக்கு இடையிலான முரண்பாடுகளை அகற்றவும், ஊழியர்களின் அதிருப்தியை குறைக்கவும் அரசு முரயன்று வருகிறது. அதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme) கீழ், ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். ஆனால், தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் -இல், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பங்களிக்கிறார்கள். இதில் அரசாங்கம் 14% சேர்க்கிறது. NPS என்பது பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாகும்.

தேசிய ஓய்வூதிய அமைப்பான (National Pension System) NPS பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாக உள்ளது, ஆகையால், இதில் ஓய்வூதியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். 25-30 ஆண்டுகள் சேவையில் உள்ள ஊழியர்கள் NPS இன் கீழ் நல்ல வருமானம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியர்களுக்கு நிலைமை மாறுபடலாம்.

இதற்கிடையில், ரயில்வேக்கு அடுத்தபடியாக மத்திய அரசு ஊழியர்களின் மிகப்பெரிய அமைப்பான அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (AIDEF) பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்துள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அந்த அமைப்பு பங்கேற்காது என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் ஓபிஎஸ்-ஐ மீட்டெடுப்பது குறித்து விவாதிக்கப்படாமல் என்பிஎஸ் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்படும் என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது. ஜூலை 15 அன்று நிதி அமைச்சக கூட்டத்தையும் AIDEF புறக்கணித்திருந்தது.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. NPS -இல் முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. NPS குறித்த  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link