புதிய கேப்டன்... மூத்த வீரர்களுக்கு ஓய்வு... இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா புது பிளான்!
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அந்த வகையில், இந்த மூன்று தொடருக்கான இந்திய அணி சில நாள்களுக்கு முன் அறிவித்த நிலையில், தென்னாப்பிரிக்கா இன்று மூன்று தொடர்களுக்குமான அணிகளை அறிவித்துள்ளது.
தற்போது ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து டெம்பா பவுமாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. டி காக் ஓடிஐ அரங்கில் ஓய்வு பெற்றதை அடுத்து, மார்க்ரம் இரு பார்மட்களுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ககிசோ ரபாடா ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் உள்நாட்டு தொடரில் விளையாட உள்ளார். தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார்.
யான்சன், லுங்கி இங்கிடி, கோட்ஸி ஆகியோருக்கு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் சில வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். பேட்டர்கள் டேவிட் பெடிங்ஹாம் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதில் வந்தனர்.
விக்கெட் கீப்பர்-பேட்டர் கைல் வெர்ரைன் மற்றும் ஆல்-ரவுண்டர் வியான் முல்டர் ஆகியோர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்குத் திரும்புகின்றனர்.