குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுபயோகம் ஆரம்பம்... வேலை, வியாபாரத்தில் வெற்றி
குரு பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர் 2025 பிப்ரவரி 4 வரை இந்த நிலையில்தான் இருப்பார். தீபாவளிக்கு முன்னதாக குருவின் வக்ர பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரும். விருந்தினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பல வித சுப பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குரு வக்ர பெயர்ச்சியின் காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குருவின் வக்ர நிலை உங்களுக்கு அனைத்துத் துறைகளிலும் நன்மைகளைத் தரும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி பல வித நல்ல செய்திகளை கொண்டு வரும். நிதி நிலை மேம்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.
மகரம்: குரு வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். அவர்களது வாழ்வில் இத்தனை நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குரு வக்ர பெயர்ச்சியின் காரணமாக மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இவர்கள் இந்த காலத்தில் நல்ல சிந்தனைகளை கொண்டு நற்செயல்களில் ஈடுபடுவது நல்லது. இந்த காலத்தில் முதலீடு செய்வதையும், புதிய வேலைகளைத் தொடங்குவதையும் தவிர்க்கலாம்.
குரு பகவானின் அருள் பெற, 'குரவே சர்வ லோகானாம், பிஷஜே பவ ரோகினாம் நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.