என்னென்றும் சச்சின் டெண்டுல்கர்...!!! இனி முறியடிக்கவே முடியாத 5 சாதனைகள் - இதோ!

Wed, 24 Apr 2024-4:49 pm,

சச்சின் டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி முதல் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். தொடர்ந்து, டெஸ்ட், ஓடிஐ, சர்வதேச டி20, ஐபிஎல் உள்ளிட்டவற்றில் சச்சின் விளையாடி உள்ளார். 

 

1989ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை என 24 ஆண்டுகளில் சச்சின் டெண்டுலகர் பல சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில், இனி வரும் காலங்களில் யாராலும் முறியடிக்கவே முடியாத  சச்சின் டெண்டுல்கரின் ஐந்து சாதனைகளை இதில் காணலாம். 

 

அதிக சதங்கள்: சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி 100 சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதங்களையும் மற்றும் ஓடிஐ கிரிக்கெட்டில் 49 சதங்களையும் சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ளார். இவருக்கு பின் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி ஓடிஐயில் 50 சதங்கள், டெஸ்டில் 24 சதங்கள், டி20இல் 1 சதம் என மொத்தம் 80 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி இன்னும் 21 சதங்களை அடித்தால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க இயலும், இதற்கு வாய்ப்பு மிக குறைவுதான். 

அதிக டெஸ்ட் போட்டிகள்: சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடி உள்ளார். இந்தியாவில் மட்டுமில்லை உலகிலேயே யாரும் 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடியதில்லை, இனி விளையாடப்போவதுமில்லை எனலாம். எனவே, இந்த சாதனையை முறியடிப்பது மிக மிக அரிதாகும். 

 

அதிக டெஸ்ட் ரன்கள்: டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரத்து 921 ரன்களை எடுத்திருந்தார். இதுவரை யாரும் 14 ஆயிரம் ரன்களை கூட தொட்டதில்லை. எனவே, இந்த சாதனையும் யாராலும் முறியடிக்க முடியாது.

 

அதிக ஓடிஐ போட்டிகள்: டெஸ்ட் போட்டிகளை போலவே அதிக ஓடிஐ போட்டிகளை சச்சின் டெண்டுல்கர் விளையாடியுள்ளார். மொத்தம் 463 போட்டிகளை அவர் விளையாடி உள்ளார். அவருக்கு அடுத்து இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தன் 448 ஓடிஐ போட்டிகளில் விளையாடியிருந்தார். எனவே, இந்த சாதனையும் யாராலும் முறியடிக்க வாய்ப்பில்லை. 

 

அதிக ஓடிஐ ரன்கள்: சச்சின் டெண்டுல்கர் ஓடிஐ கிரிக்கெட்டில் 18 ஆயிரத்து 426 ரன்களை அடித்துள்ளார். இதுவரை யாரும் ஓடிஐ கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை கூட தொடவில்லை. சச்சின்தான் ஓடிஐ கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 200 ரன்களை அடித்த முதல் வீரர் ஆவார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link