குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2025 ஆரம்பமே அற்புதமாய் இருக்கும்... முழு ராசிபலன் இதோ
மேஷம்: குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நற்பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் வசதிகளும் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வியாபாரிகள் அதிக லாபம் பெறுவார்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு வக்கிரப் பெயர்ச்சி கஷ்டங்களை நீக்கும் வகையில் அமையும். பல நல்ல விளைவுகளை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்கிரப் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். பணியிடத்திலும் உங்கள் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்: குரு வக்கிர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உங்கள் நிதிநிலை மேம்படும். வங்கி இருப்பு அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் வாழ்க்கை முறை மாறுபடும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு வக்கிர பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். சில சவாலான சூழல்களை எதிர்கொள்ள நேரிடலாம். வியாபாரத்தில் புதிய திட்டங்களை துவங்குவதற்கு முன் பலரிடம் பேசி ஆலோசித்த பின்னர் தொடங்குவது நல்லது. உடல்நிலை நன்றாக இருக்கும்.
துலாம்: குரு வக்ர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். மறைமுகமான எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புத்திசாலித்தனத்டுடன் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது முடிவடையும். குரு பகவானின் அருளால் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி சவாலான சூழல்களை உண்டாக்கும். இந்த காலத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பார்கள். பிறரிடம் பேசும் பொழுது நிதானம் தேவை.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி சுபமான பலன்களை அளிக்கும். நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். பண பரிமாற்றத்தில் கவனம் தேவை.
மகரம்: குரு பெயர்ச்சியின் பொழுது குருவின் அருளால் உங்கள் குழந்தைகளுடனான உறவு மேம்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். சுப காரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு அதிகமாகும் பண வரவால் பிறருக்கு அதிகமாக உதவி செய்வீர்கள். அனைத்து சிக்கல்களும் தீரும் காலமிது.
மீனம்: ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் தேவை. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.