சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு புத்தாண்டு பொற்காலமாய் இருக்கும், மகிழ்ச்சி பெருகும்

Fri, 30 Dec 2022-3:44 pm,

சுக்கிரன் கிரகம், டிசம்பர் 5 ஆம் தேதி தனுசு ராசியில் பிரவேசித்துள்ளது. சுக்கிரனின் சஞ்சாரம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நல்ல பலன்கள் ஏற்படும். 

தனுசு ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், லக்ஷ்மிநாராயண யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த யோகம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறப்பான பலனை ஏற்படுத்தி வாழ்வில் மகத்தான வெற்றியைப் பெற உதவும். தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றிகள் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுமட்டுமின்றி, பொருளாதார பலனும் இருப்பதாக தெரிகிறது. இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். 

புதன் ஏற்கனவே இங்கு அமர்ந்து உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றியின் கட்டம் தொடங்கும். இதுமட்டுமின்றி இந்த காலகட்டத்தில் புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இந்த பயணங்கள் அனுகூலமான பலன்களை அள்ளிக்கொடுக்கும். பொருளாதார ஆதாயம் கைகூடும். 

சுக்கிரனின் பெயர்ச்சியால் லக்னாதிபதி யோகம் அமைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் கடாட்சம் கிடைக்கும். இந்த நேரம் பண வரவின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டமானது. தொழில், வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான பலன்கள் உண்டாகும். நீங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமானது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link