இந்த வீரர் வந்தால் 3 முக்கிய பிரச்னைகளை தீர்ந்துவிடும்... இந்தியா தொடரையும் வெல்லும்?!
)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
)
முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் தனது திருமணத்திற்காக கௌகாத்தியில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் ஸ்குவாடில் தீபக் சஹார் சேர்க்கப்பட்டார். இருப்பினும், முகேஷ் குமார் 4ஆவது, 5ஆவது போட்டியில் விளையாட அணிக்கு திரும்புவார்.
)
இப்போது தீபக் சஹார் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிக்கு இந்திய அணியில் இணைந்திருப்பது பின்வரும் மூன்று விஷயங்களை பலப்படுத்தும் எனலாம்.
பவர்பிளே மாயாஜாலம்: ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களிலேயே பார்த்திருப்போம் அவரின் பவர்பிளே ஓவர்கள், போட்டியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று. பந்து புதியதாக இருக்கும்போதே இவரின் நான்கு ஓவர்களையும் கொடுத்து முடித்துவிடுவார் சிஎஸ்கே கேப்டன் தோனி. அந்தளவிற்கு கட்டுக்கோப்புடன் பந்துவீசுவது மட்டுமின்றி இரண்டு பக்கமும் பந்தை நகர்த்துவதில் இவர் வல்லவர்.
கீழ் வரிசை பேட்டர்: இந்திய அணிக்கு கீழ் வரிசை பேட்டர் என்று யாருமே இப்போது இல்லை. அக்சர் படேல் அவுட்டாகிவிட்டால் அடுத்து பேட்டிங் அவ்வளவுதான் என்று இப்போது சொல்லிவிடலாம். ஆனால், பெரிய சிக்ஸ் அடிப்பதிலும், ஸ்ட்ரைக் ரோடேட் செய்வதிலும் தீபக் சஹார் வல்லவர். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரிலும், தற்போது நடைபெற்று வந்த விஜய் ஹசரா தொடரிலும் (50 ஓவர்களுக்கான உள்நாட்டு தொடர்) அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியிருந்தார்.
டெத் ஓவரிலும் கைக்கொடுப்பார்: இந்தியாவுக்கு இப்போது டெத் ஓவரிலும் சில பிரச்னை உள்ளது. முகேஷ் குமார் நன்றாக வீசினாலும் அவருக்கு மறுமுனையில் கைக்கொடுக்க தீபக் சஹார் பொருத்தமாக இருப்பார். மேலும், அடுத்த டி20 உலகக் கோப்பை அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள நிலையில், அங்கு முழுவதும் ஆடுகளங்கள் மெதுவானதானதாகும். அதில் தீபக் சஹார் போன்றோர் நன்றாக வீச அதிக வாய்ப்புள்ளது.
ராய்ப்பூரில் நாளை (டிச. 1) மாலை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் பிளேயிங் லெவனில் தீபக் சஹார் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.