இந்தியா vs பாகிஸ்தான்.. அதுவும் அரையிறுதியில்.. உலகமே எதிர்பார்க்கும் இந்த போட்டி நடக்குமா?
நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup 2023) தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதியை உறுதி செய்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இரண்டாவது அரையிறுதியில் வரும் நவ. 16ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் மோத உள்ளன.
முதல் அரையிறுதியில் இந்தியா (Team India) உடன் மோதப்போவது யார் என்ற கேள்வி ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. அதாவது நியூசிலாந்து (New Zealand National Cricket Team) பெரிய நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது, எனவே இந்தியா - நியூசிலாந்து அணிகள்தான் மோதும் என கூறப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 1 சதவீதம் வாய்ப்பிருக்கு எனலாம்.
பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி (ENG vs PAK) நவ. 11ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் சந்திக்க உள்ளது.
இதில், பாகிஸ்தான் அணி (Pakistan National Cricket Team) பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து இதில் காணலாம்.
Pakistan Chance To Semi Finals: அதாவது, அந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து பின்னர் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது, சேஸிங் செய்தால் நிர்ணயிக்கப்படும் இலக்கை 284 ரன்கள் மிச்சம் வைத்து வெற்றி பெற வேண்டும், அதாவது 16 பந்துகளிலேயே இலக்கை எட்ட வேண்டும். இந்த வகையில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும்.
Pakistan Chance To Semi Finals: பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 300 ரன்களை அடித்ததால், இங்கிலாந்தை 13 ரன்களுக்குள் அவுட்டாக்க வேண்டும். 400 ரன்களை அடித்தால் அவர்களை 112 ரன்களுக்குள் சுருண்ட வேண்டும். 450 ரன்களை அடித்தால் 163 ரன்களுக்குள் இங்கிலாந்தை ஆல்அவுட்டாக்க வேண்டும். 500 ரன்களை எடுத்தால் இங்கிலாந்தை 211 ரன்களுக்குள் அவுட்டாக்க முடியும்.
ஓரளவு நல்ல ரன்ரேட் உள்ள பாகிஸ்தானுக்கு இந்த நிலைமை என்றால், ஆப்கானிஸ்தானுக்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை எனலாம். எனவே, பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டி மீது எதிர்பார்ப்பு உள்ளது.