திருமண மாதத்தை அறிவித்த பிக்பாஸ் அறிவித்த ஷெரீன்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Fri, 21 Apr 2023-12:11 pm,

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். 

 

அதன்பிறகு விசில் படத்தில் அழகிய அசுரா பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார். மேலும் சில படங்களில் மட்டுமே நடித்த ஷெரின் சில காலம் சினிமா பக்கமே வரவில்லை.

 

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கம்பேக் கொடுத்தார் ஷெரீன்.

 

அந்நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை சுத்தமாக குறைத்து இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராகியுள்ளார். 

 

அவர் தற்போது தன்னுடைய திருமணத்தை அறிவித்துள்ளார். ஜாதகப்படி அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை யார்? என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link