Vikraman Marriage: பிக் பாஸ் புகழ் விக்ரமனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
)
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் சீசன் 6ல் பங்கேற்று ரன்னர்-அப் விருது வென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஜர்னலிஸ்ட் விக்ரமன் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தனது நீண்டகால நண்பரை திருமணம் செய்து கொண்டார்.
)
பெரிதாக பிரபலங்கள் பங்குபெறாத அவரது திருமணம் எளிய முறையில் நடைபெற்றுள்ளது. விக்ரமன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.
)
சென்னையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6ல் சக போட்டியாளராக பங்கேற்ற நடிகை ரசிதாவும் இந்த புது ஜோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.
விக்ரமன் அரசியல் கட்சியில் சேர்வதற்கு முன்பு இருந்தே பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். பல அரசியல் விவாதங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் போட்டிக்கு பிறகு பெரிதாக எங்கும் காணப்படாத விக்ரமன் தற்போது திருமண செய்தியுடன் மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.