பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
பிக் பாஸ் தமிழ் 12வது வாரத்தை நெருங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கடந்த சில வாரங்களாக 2 ஏவிக்சன் நடைபெற்றுள்ளது.
இதனால் இந்த வாரமும் 2 ஏவிக்சன் இருக்குமா என்ற ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர். இந்த வாரம் நடைபெற்ற செங்கலா செங்கலா டாஸ்கில் பலருக்கும் அடிபட்டது.
குறிப்பாக ராணாவிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். சனிக்கிழமை எபிசோடில் யாரும் வெளியேற்றப்பட வில்லை.
இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான ரஞ்சித் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்தே பெரிதாக எதுவும் விளையாடவில்லை என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தலைவராக இருந்தும் ரஞ்சித் எதுவும் செய்யவில்லை என்று போட்டியாளர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இந்நிலையில் ரஞ்சித் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த வாரம் முத்துக்குமரன், தீபக், விஷால், அருண், ஜாக்குலின், பவித்ரா, ராயன், ரணவ், மஞ்சரி, அன்ஷிதா, சௌந்தர்யா, ரஞ்சித் என அனைவரும் நாமினேஷனில் இருந்தனர்.