Black Gold: 30 கோடி கி.மீ தூரத்தில் இருந்து வந்துள்ள கருப்பு தங்கம்..!!

Fri, 25 Dec 2020-9:01 pm,

கடந்த ஆண்டு, அதாவது 2019 ஆம் ஆண்டு ஜப்பானிய ஹயாபூசா 2 (Hayabusa 2) விண்கலத்தால் இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இருப்பினும், இந்த விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளது. ரியுகு என்ற சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த மாதிரிகள் 0.4 அங்குல தடிமன் கொண்டவை என்றும் அவை பாறை போல கடினமாக உள்ளது என்றும் ஜப்பானிய நிபுணர்கள் தெரிவித்தனர். சிறியஅளவில் கருப்பு  நிறத்தில் கற்கள் போன்ற துகள்களாக இவை உள்ளன.

2019 ஜூலை மாதம்  இரண்டாவது முறையாக சிறுகோளின் மீது இறங்கியது. அந்த நேரத்தில் அதன் மேற்பரப்பில் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது சிறுகோளின் மீது எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ரியுகு என்பது ஜப்பானிய பெயர், அதாவது 'டிராகனின் அரண்மனை'. ரியுகு என்பது பூமிக்கு மிக நெருக்கமான ஒரு சிறுகோள் ஆகும். இதன் அளவு சுமார் 1 கிலோமீட்டர். ரியுகு பூமியிலிருந்து சுமார் 30 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த விலைமதிப்பற்ற மாதிரிகள் அறிவியல் கருவிகளின் உதவியுடன் ஆராய்ச்சி செய்யப்படும்.  பூமி மற்றும் சந்திரன் ஆகியவையும் கண்காணிக்கப்படும். இந்த மாதிரிகளின் உதவியுடன், சிறுகோள்களின் பிறப்பு மற்றும் பூமியின் வாழ்வின் தோற்றம் தொடர்பான பதில்கள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விசாரணையின் பின்னர் இது இந்த மாதிரிகளை நாசா மற்றும் பிற சர்வதேச விண்வெளி நிறுவனங்களுக்கு வழங்கும். இதனால் இது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யலாம்.

ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம், ஹயாபூசா 2 பணியை 2014 டிசம்பரில் தொடங்கியது.  2018 இல் ரியுகு என்ற சிறுகோளை இது சென்றடைந்தது. 2019 இல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் சில மாதிரிகள் மேற்பரப்புக்குக் கீழே உள்ள பகுதியில் இருந்து எடுக்கப்பட்டன. ஹயாபூசா 2 காப்ஸ்யூல் என்பது  ஒரு சிறுகோளின் உள்ளே இருந்து ஒரு பாறை மாதிரி எடுக்கும் முதல் மிஷன் ஆகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link