சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகள் மீது சனி பகவானின் அருள் மழை... வீடு, வாகனம் வாங்கும் யோகம்

Wed, 29 Jan 2025-8:35 am,
Sani Peyarchi

அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Sani Peyarchi Palangal

அதற்கு முன்னதாக சனி பகவான் பிப்ரவரி 2 ஆம் தேதி குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி விசேஷமானதாக கருதப்படுகின்றது.

Sani Nakshatra Peyarchi

சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மற்றும் மீனத்தில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்டட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மகிழ்ச்சியைப் பொழிவார். உங்கள் ஜாதகத்தில் சனி மற்றும் குருவின் நல்ல நிலை காரணமாக, வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். வீடு கட்டும் திட்டங்கள் அல்லது சொத்து பரிவர்த்தனைகள் அனுகூலமாக அமையும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாத சனி பெயர்ச்சியும், மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி நட்சத்திர பெயர்ச்சியும் அனுகூலமான நன்மைகளை அளிக்கும். இதன் தாக்கத்தால், நிலம், வாகனம் மற்றும் வீடு வாங்க/விற்க எண்ணம் கொண்டவர்களின் எண்ணம் நிறைவேறும். சனி அருளால் 2025 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். வேலையில் போனஸ் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இது செல்வத்தை அதிகரிக்கும். முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும். சனி பகவானின் ஆசிர்வாதத்தால், உங்கள் செல்வமும் புகழும் அதிகரிக்கும்.

கன்னி: சனி பகவான் பிப்ரவரி 2025 இல் குருவின் நட்சத்திரத்தில் பெயர்ச்ச்சி ஆகிறார். இது கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு அதிகமாகும். தொழிலில் பணத்தை முதலீடு செய்வது மங்களகரமானதாகவும் பலனளிப்பதாகவும் இருக்கும்.

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி அனுகூலமான பல நன்மைகளை அளிக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பல வித வெற்றிகளை காண்பீர்கள். மனதை வாட்டி வந்த தொல்லைகள் தீரும். பல நல்ல செய்திகளை பெறுவீர்கள்.

 

மகரம்: மார்ச் மாதத்திற்குப் பிறகு மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல நேரம். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் இந்த காலகட்டத்தில் வாகனம் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இந்த ஆண்டு, சொத்து சேர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

ஏழரை சனி தாக்கத்தை குறைக்க, சனி சாலிசா, அனுமான் சாலிசா, கோளறு பதிகம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வது நல்லது. மேலும், முடிந்த போதெல்லாம் சனீஸ்வரரின் கோயில்களுக்கு சென்று வரவும். நல்ல செயல்களும் தூய்மையான எண்ணத்துடன் செய்யப்படும் தான தர்மமும் ஏழரை சனி பாதிப்பை குறைக்கும்.

சனி பகவானின் அருள் பெற சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோவில்களில் தீபம் ஏற்றி வைக்கலாம். மேலும் ஏழை எளியவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டுள்ளவர்களையும் சனி பகவான் சோதிப்பதில்லை.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link