சுக்கிரன் பெயர்ச்சி: இன்னும் 4 நாட்களில் இந்த ராசிகள் மீது லட்சுமி கடாக்ஷம், சுக்கிர தசை
மேஷ ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சர்க்கரை தொடர்பான நோய்கள் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவார்கள். கொவத்தை விலக்கி பொறுமையை கடைபிடித்தால் அனுகூலமான பலன்களை அனுபவிக்கலாம். இந்த நேரத்தில் தலைவலி பிரச்சனையால் நீங்கள் அவதிப்படலாம்.
இந்த காலம் முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கும். சுக்கிரன் அருளால் இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணி இடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
இந்த காலத்தில் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் சம்பந்தமான விஷயங்களுக்காக பல பயனங்களை மேற்கொள்வீர்கள். இவற்றால் அனுகூலமான பலன்களும் கிடைக்கும்.
சுபச்செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பல சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடன் பிறந்தவர்களுக்காக பணத்தை செலவழிப்பீர்கள். உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
வேலை தேடும் துலா ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையில் புதிய முயற்சிகளை தொடங்குவீர்கள். இதனால் உங்கள் படைப்பாற்றல் திறன் பிரகாசிக்கும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பாட்டு, நடனம், வாத்தியங்கள் என கலைத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் இப்போது அதிகமாக கிடைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் நல்லது. குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
சோம்பல் அதிகரிக்கும். அதை தகர்த்து புத்துணர்ச்சியுடன் உங்கள் பணிகளில் ஈடுபட வேண்டிய நேரம் இது. இல்லையென்றால் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். இந்த பயணங்களால் உறவினர்கள் இடையே உறவு வலுப்பெறும். வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்கள் முந்தைய கடின உழைப்பின் காரணமாக, இப்போது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணி இடத்தில் நீங்கள் விரும்பிய படி அனைத்தும் நடக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.