சுகர் லெவலை சுலபமா கட்டுப்படுத்தணுமா? கொய்யா இலையை இப்படி பயன்படுத்தி பாருங்க
கொய்யா பழம் ஆரோக்கியமானது. அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவே உள்ளன. கொய்யா இலைகள் பல நோய்களுக்கு பாரம்பரிய மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
கொய்யா இலையின் சாறு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அலர்ஜி பிரச்சனையையும் இது நீக்குகிறது.
கொய்யா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது அதன் செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் மெதுவாக இருப்பதைக் குறிக்கிறது. இதனால் அது படிப்படியாக குளுக்கோஸ் அளவுகளின் உயர்வை பாதிக்கும். கொய்யாவில் கலோரிகள் குறைவு. எனவே, இது எடை இழப்புக்கு உதவுகிறது.
உடல் எடை அதிகமாக இருப்பதும் நீரிழிவு நோய்க்கு ஒரு பெரிய காரணியாக உள்ளது. சுமார் 100 கிராம் கொய்யாவில் 9 கிராம் இயற்கை சர்க்கரை மற்றும் 68 கலோரிகள் மட்டுமே உள்ளன. கொய்யாவில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது.
கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சாதாரண இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க இது சிறந்தது. மேலும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் சி-யை விட கொய்யாவில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
கொய்யா சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொய்யாவில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. இது இன்சுலின் உற்பத்திக்கு உதவி நீரிழிவு நோயின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
கொய்யா இலையை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் கொதிக்க வைத்து, தேநீர் போல் உட்கொண்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கொய்யா இலையில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன.