BMW Motorrad அறிமுகப்படுத்தும் புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகள்
பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்குகள் முழு எல்இடி பொருத்தப்பட்டவை. ஹெட்லைட் வடிவமைப்பையும் எக்ஸ் வடிவ ஒளி விளக்குகளையும் கொண்டவை. புதிய லைட்டிங் செயல்பாடுகள், பயணத்தின்போது சிறப்பான ஒளியை கொடுப்பவை.
இந்தியாவில், பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் புரோவின் அறிமுக எக்ஸ்ஷோரூம் விலை 20,45,000 ரூபாய் ஆகும். பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் புரோவின் எக்ஸ்ஷோரூம் விலை 22,40,000 ரூபாயில் தொடங்குகிறது.
பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் புதிய பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்குகள் முழுமையான பில்ட்-அப் யூனிட்களாக (CBU) விற்பனையாகவுல்ளது. பி.எம்.டபிள்யூ மோட்டராட் டீலர்ஷிப்பில் வாடிக்கையாளர்கள் நேரடியாக பைக்குகளை முன்பதிவு செய்யலாம். டெலிவரிக்கு முன்னர் முன் அங்கீகரிக்கப்பட்ட வாகனக் கடன்களையும் நிறுவனம் வழங்குகிறது.
பி.எம்.டபிள்யூ ஆர் 1250 ஜி.எஸ் மற்றும் புதிய பி.எம்.டபிள்யூ ஆர் 1250 ஜி.எஸ் அட்வென்ச்சர் இரண்டு பைக்குகளுமே இரண்டு அடிப்படை வண்ணங்களில் கிடைக்கிறது: ஸ்டைல் டிரிபிள் பிளாக் வேரியண்ட் மற்றும் ஸ்டைல் ரலி வேரியண்ட் என இரு வேறு நிறங்களில் இந்த பைக்குகள் கிடைக்கும். சிறப்பு "40 ஆண்டுகள் ஜிஎஸ்" பதிப்பும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடைக்கும்.
அனைத்து பிஎம்டபிள்யூ மோட்டராட் பைக்குகளுக்கும் மூன்று ஆண்டு நிலையான உத்தரவாதம் உண்டு. இந்த மூன்று ஆண்டு உத்தரவாதத்தில் எவ்வளவு கிலோமீட்டர் வரை என்ற வரம்பு ஏதும் கிடையாது. அதோடு நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கான உத்தரவாதத்தை நீட்டிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படலாம்.