இந்த 5 உடல் சைகைகள் மட்டும் செய்யாதீங்க! மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்!

Sun, 07 Aug 2022-7:09 am,

ஒருவர் உங்களிடம் பேசும்போது நீங்கள் உங்கள் முகத்தை தொடுவது அவரது பேச்சில் விருப்பமில்லாததை காட்டுகிறது, இது அவர்களுக்கு உங்கள் மீது மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.  இதன்மூலம் நாம் பதட்டமாக மற்றும் நம்பிக்கை இல்லாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

 

ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் சிலர் இரண்டு கைகளையும் இணைத்து பின்னிக்கொள்வார்கள், இது நல்ல சைகை அல்ல.  நீங்கள் நம்பிக்கையற்றவர் போன்றும், கவலையுடன் அல்லது பதட்டத்துடன் இருப்பதாகவும் பிறருக்கு தோன்றும்.

 

நீங்கள் முதுகுக்கு பின்னால் கைகளை கட்டிக்கொள்வது மற்றவரிடமிருந்து எவ்வித தொடர்பையும் வரவேற்க விரும்பவில்லை என தோன்ற செய்யும்.  இது உங்களுக்கு அதிகாரமிக்கவராக தோன்றலாம் ஆனால் உங்களை தைரியமில்லாதவராக மற்றவர்கள் நினைக்கக்கூடும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்..

 

ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் நாம் கால்களை குறுக்கே வைத்துக்கொண்டு நிற்பது அவர்களது கருத்துக்களை நாம் கேட்க அவமதிப்பது போன்று தோன்றும்.

 

ஒருவருடன் நாம் பேசும்போது கண் தொடர்பு கொண்டிருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் பேசுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்று அர்த்தம்.  அப்படி நீங்கள் பிறர் பேசுவதை கவனிக்கவில்லையெனில் கண் தொடர்பு கொள்வது, சிரிப்பது, தலையசைத்து போன்றவற்றை செய்யவேண்டாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link