அம்மா பொண்ணா இவங்க? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஸ்வேதா திவாரி இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். பிரேர்ணா ஷர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
2010ல், ஸ்வேதா திவாரி பிக் பாஸில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிக்பாஸ் தொடரின் முதல் பெண் வெற்றியாளர் ஆனார்.
ஸ்வேதா திவாரி 1998ல் நடிகர் ராஜா சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார், இவர்களது மகள் தான் பாலக் திவாரி. 2000 ஆண்டில் பிறந்த இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பாலக் திவாரி சல்மான்கான் நடித்த Kisi Ka Bhai Kisi Ki Jaan, Rosie: The Saffron Chapter (2022) மற்றும் The Virgin Tree போன்ற படத்தில் நடித்து உள்ளார்.
2007ல் ராஜா சவுத்ரியை விவாகரத்து செய்து கொண்டார் ஸ்வேதா திவாரி. பின்னர், 2013ம் ஆண்டு நடிகர் அபினவ் கோஹ்லியை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ரேயான்ஷ் கோஹ்லி என்ற மகன் உள்ளார். 2019ல் அபினவ் கோஹ்லியை விவாகரத்து செய்தார்.
அம்மா ஸ்வேதா திவாரி, மகள் பாலக் திவாரி இருவரும் அக்கா, தங்கை போல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.