பிரபல நடிகைகள் அன்றும் இன்றும் -என்ன ஒரு மாற்றம்
![ஐஸ்வர்யா ராய் Aishwarya Rai Bachhan](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2020/09/14/639797-3-56.jpg?im=FitAndFill=(500,286))
தனது அழகால் பிரபலமான ஐஸ்வர்யா ராய் பச்சன் 1997 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்படமான 'இருவர்' படத்தில் அறிமுகமானார், அதன் பிறகு ஐஸ்வர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் தொய்வே ஏற்படவில்லை. 1994 இல் உலக அழகியாக பட்டம் வென்ற ஐஸ்வர்யா திரைப்பட உலகில் மகத்தான வெற்றியைப் பெற்று முடிசூடா அழகியாய் இன்றும் திகழ்கிறார்....
![கண்ணழகி கஜோல்... Kajol](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2020/09/14/639801-3-57.jpg?im=FitAndFill=(500,286))
90 களின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான கஜோல் 1992 ஆம் ஆண்டில் 'பெகுடி' திரைப்படத்துடன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் ஆரம்ப காலங்களில் கஜோலின் தோற்றம் மற்றும் பாணி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஸ்டைலில் முன்னேறிய கஜோல், தமிழில் மின்சாரக்கனவு படத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் ஆடிய நடனம் இன்றும் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுவது.... பல ஆண்டுகளுக்குப் பிறகும், கஜோல் மிகவும் அழகாகவும், முன்பை விட மிகவும் அழகாகவும் இருக்கிறார்.
![மாதுரி தீக்ஷித் Maduri Dixit](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2020/09/14/639804-3-58.jpg?im=FitAndFill=(500,286))
இந்தி திரையுலகில் மிகவும் வெற்றிகரமான நடிகைகளில் மாதுரி தீட்சித் ஒருவர். கடைசியாக கலங்க் படத்தில் நடித்தார் மாதுரி. 53 வயதாகும் மாதுரி, தனது உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாகவும், மிகவும் விழிப்புடனும் இருக்கிறார். அவர் தனது உடற்பயிற்சிகளின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். 'அபோத்' படத்துடன் மாதுரி பாலிவுட் துறையில் காலடி எடுத்து வைத்தார், 'தேஜாப்' (1988) திரைப்படத்திற்கு பின் மாதுரியின் கலைப்பயணம் திரும்பிப் பார்க்க நேரமில்லாததாக மாறிவிட்டது.
90 களின் பிரபல நடிகை ரவீனா டாண்டன் தனது திரைப்பட வாழ்க்கையில் பல அற்புதமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஆளவந்தான் திரைப்படத்தில் கமலஹாசனுக்கு இணையாக நடித்து கலக்கியவர்.1992 ஆம் ஆண்டு வெளியான பட்டர் கே பூல் திரைப்படத்தில் பாலிவுட்டில் அறிமுகமான ரவீனா, தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதன் மூலம் எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர். ரவீனாவின் தோற்றமும் பாணியும் நிறைய மாறிவிட்டன...
இந்தி மொழித் திரைப்படங்களைத் தவிர, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் ஜூஹி சாவ்லா பணியாற்றியுள்ளார். ஜூஹி சாவ்லா பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தனது நடிப்பால் பார்வையாளர்களின் மனதை வென்றவர். ஜூஹியின் அழகும் நகைச்சுவை உணர்வும் ஆச்சரியமளிப்பது... 52 வயதில் கூட, ஜூஹி சாவ்லா, மிகவும் அழகாகவும், மனதை கவரும் அழகியாகவும் இருக்கிறார் என்பது அழகிற்கு வயதேதும் இல்லை என்பதை நிரூபிக்கிறது.