Detel Easy Plus: உலகின் மிக மலிவான e-Scooter; புக்கிங் செய்ய ₹1999 மட்டுமே

Sun, 21 Mar 2021-5:05 pm,

இந்த மின்சார ஸ்கூட்டர் 'டிடெல் டிகார்பனாய்ஸ் இந்தியா' முயற்சியின் கீழ் அறிமுகப்படுத்தப்படுகிறது.  டிடெல் ஈஸி பிளஸ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை பயணிக்க முடியும. இதில்  20Ah பேட்டரி உள்ளது. டெட்டல் ஈஸி பிளஸ் மிலிவானது, சிக்கமானது, இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. டிடெல் ஈஸி பிளஸ் மஞ்சள், சிவப்பு மற்றும் ராயல் ப்ளூ வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

(Photo - Pixabay)

மின்சார இரு சக்கர வாகனம் டெடெல் ஈஸி பிளள் விலை ஜிஎஸ்டியுடன் மொத்தம் ₹41,999 விலையை நிர்ணயித்துள்ளது. இருசக்கர மின்சார வாகனத்தின் அதிகபட்ச  வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர். 7 முதல் 8 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

(Photo - Detel)

டீடெல், எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பிரச்சாரமும் தொடங்கப்படும் என்று டீடெல் அறக்கட்டளையின் நிறுவனர் கீதிகா பாட்டியா கூறுகிறார். இந்த முயற்சியின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட சான்றிதழுடன் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும். இந்த சான்றிதழில் வாடிக்கையாளரின் பெயரில் நடப்பட்ட மரத்தின் ஜியோடாக் இருக்கும், இதன் மூலம் மரம் இருக்கும் இடத்தை அறியலாம். (Photo - Detel)

டீடெல் நிறுவனம் கடந்த ஆண்டு 1 குரு என்ற பெயரில் ஒரு தொலைபேசியை அறிமுகப்படுத்தியது, இதன் விலை வெறும் ₹699. இந்த தொலைபேசியில் 16 ஜிபி மெமரி உள்ளது, மெரியை மேலும் அதிகரிக்கலாம். மேலும், ஒளிரும் விளக்கு, ஜிபிஆர்எஸ் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன. விரைவில் வெறும் ₹3999 க்கு எல்.ஈ.டி அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. (Photo - Detel)

டீடெல் மலிவான மற்றும் சக்திவாய்ந்த பவர் பேங்கையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பவர் பேங்க் (Power Bank) 10000 mAh மற்றும் 20000 mAh திறன் கொண்டது. இது உலகின் மலிவான பவர் பேங்க் (Power Bank) என்று நிறுவனம் கூறுகிறது. இதன் விலை முறையே ₹349, ₹699. (Photo - Detel)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link