Astro: பெண்களை தன்வசப்படுத்துதில் வல்லவர்கள் இந்த ‘5’ ராசிக்கார ஆண்கள்..!!
மேஷ ராசிக்காரர்கள் ஊர்சுற்றுவதில் சிறந்தவர்கள். பெண்களின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொண்டு, பெண்களை கவர அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். அவர்கள் தங்கள் வசீகரத்தினாலும், வித்தியாசமான அணுகுமுறையினாலும் பெண்களை எளிதில் ஈர்க்கிறார்கள். மேலும், சில சமயங்களில் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் விதம் கூட நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
மிதுன ராசிக்காரர்கள், பெண்ணின் கவனத்தையும் ஈர்ப்பதில், மிகவும் வல்லவர்கள். இவர்கள் என்ன செய்தாலும், பெண்களே அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்றும் கூறலாம். இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான மனோபாவத்துடன், மிகவும் மென்மையான இயல்புடையவர்கள். இதனால் பெண்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். இது தவிர, பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் அற்புதமான குணம் அவர்களுக்கு உள்ளது, இதன் காரணமாக அவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ள பெண்களுக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
சிம்ம ராசிக்கார ஆண்கள் ஆளுமை பண்பு நிறைந்தவர்கள். தங்கள் ஆளுமையால் பெண்களை எளிதில் ஈர்க்கிறார்கள். இது தவிர, அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை உடையவர்கள். அவர்களின் இந்த குணத்தால், பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் இயற்கையில், சீரான வாழ்க்கை முறையை கடை பிடிப்பவர்கள், ஆனால் அவர்கள் தங்கள் வசீகரத்தினால் பெண்களை எளிதில் ஈர்க்கிறார்கள். அவர்களிடம் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்து கொள்வதால், பெண்கள் மனதை எளிதில் கவர்ந்து விடுகிறார்கள்
மகர ராசிக்காரர்கள் பேசும் பாணி வித்தியாசமானது. பெண்கள், ஆண்களின் வித்தியாசமான தன்மையினால் ஈர்க்கப்படுகிறார்கள். இது தவிர, இந்த ராசிக்கார ஆண்கள் சுறுசுறுப்பாகவும், புத்திசாலியாகவும் இருப்பதால், அவர்களுடன் நட்பு கொள்ள பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.