காலையில் சாப்பிட பிடிக்கவில்லையா? இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க!
தால் சட்னி அவ்வளவு பிரபலமாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும். கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு, பாசிபருப்பு மற்றும் அர்ஹர் உள்ளிட்ட பல பருப்புகளின் கலவையுடன் செய்யப்படும் இந்த சட்னியை எந்த உணவோடும் சேர்த்து சாப்பிடலாம்.
இட்லி செய்வதற்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் உளுத்தம் பருப்புக்கு பதிலாக ஸ்ப்ரவுட்ஸ்களை பயன்படுத்தி இட்லி செய்யலாம். இது சுவையாக இருப்பதோடு, உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது.
பாசிபருப்பு சேர்த்து செய்யப்படும் தால் பராதா அதிக புரோட்டீன் நிறைந்ததாகவும், சுவையாகவும் இருக்கும். காலை நேர உணவில் ஒரு கிண்ணம் தயிருடன் சேர்த்து இதனை சாப்பிடுவது சிறந்தது.
ஆந்திராவின் பிரபலமான உணவுகளில் ஒன்று பேசரட்டு எனும் தோசை, பாசிபருப்பில் செய்யப்படும் இந்த பச்சை நிற தோசை சுவையாக இருப்பதுடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஒவ்வொரு பாரம்பரிய வட இந்திய விருந்துகளிலும் பிரபலமாக இடம்பெறுவது இந்த தால் ஷோர்பா, இது பருப்பில் செய்யப்பட்ட ஒரு சுவையான சூப். மழைக்காலங்களில் இந்த காரசாரமான சூப் சாப்பிடுவதற்கு இதமாக இருக்கும்.
ஆரோக்கியமான இந்திய ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று இந்த தோக்லா, புளித்த மாவில் செய்யப்படும் இந்த தோக்லா நிறைய கலோரிகளை கொண்டுள்ளது.
வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாய் போன்ற ஆரோக்கியமான பொருட்களுடன் சேர்த்து செய்யப்படும் சின்ஹா 'மூங்க்லெட்' அல்லது 'மூங் டால் ஆம்லெட்' காலை நேரத்திற்கு ஏற்ற சிறந்த அல்லது புரதச்சத்து நிறைந்த உணவாகும்.