கம்பேக் கொடுத்து மிரட்டிய ரிஷப் பண்ட்... ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிஎஸ்கே?

Sun, 31 Mar 2024-9:51 pm,

நடப்பு ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை விசாகப்பட்டினத்தில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

சிஎஸ்கே அணி எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாத நிலையில், டெல்லி சில மாற்றங்களை செய்தது. டெல்லி அணியில் ரிக்கி பூய், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பதில் பிருத்வி ஷா (Prithvi Shaw) மற்றும் இஷாந்த் சர்மா (Ishanth Sharma) ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். 

பிருத்வி ஷா - டேவிட் வார்னர் (David Warner) ஜோடி பவர்பிளேவில் அதிரடியாக விளையாடி 61 ரன்களை சேர்த்தது. டேவிட் வார்னர் அரைசதம் கடந்த நிலையில், இந்த ஜோடி 93 ரன்களை குவித்தபோது முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் அவர் மதீஷா பதிரானாவில் (Matheesha Pathirana) அசத்தலான கேட்சால் ஆட்டமிழந்தார். பிருத்வி ஷாவும் அதற்கடுத்த ஓவரிலேயே ஜடேஜாவிடம் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 

 

தொடர்ந்து, மிட்செல் மார்ஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடிக்க ரிஷப் பண்ட் (Rishabh Pant) நிதானம் காட்டி வந்தார். அந்த சமயத்தில் டெல்லி எளிமையாக 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பதிரானாவின் 15ஆவது ஓவர் அதனை மாற்றியமைத்தது. மார்ஷ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரை ஒரே ஓவரில் அவரின் அதிரடி யாக்கர்களால் ஆட்டமிழக்கச் செய்தார். 

 

கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்ட தொடங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 31 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த பந்திலேயே சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் (Ruturaj Gaikwad) கெய்க்வாட்டிம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் போரெல் - அக்சர் படேல் பெரியளவில் சோபிக்காத நிலையில், டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை அடித்தது. 

 

டெல்லி அணியில் அதிகபட்சமாக வார்னர் 52 ரன்களையும், ரிஷப் பண்ட் 51 ரன்களையும், பிருத்வி ஷா 43 ரன்களையும் குவித்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் பதிரானா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா (Jadeja) மற்றும் முஸ்தபிசுர் ரஹீம் (Mushtafishur Rahman) தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 1 சுழற்பந்துவீச்சாளர் என்ற பார்முலாவிலேயே சென்னை அணி விளையாடியது. 

 

சிஎஸ்கே அணியில் சிவம் துபே (Shivam Dube) Impact Player ஆக இறங்குவார் என தெரிகிறது. நோர்க்கியா, இஷாந்த் சர்மா, முகேஷ் சர்மா, கலீல் அகமது, அக்சர் படேல், மிட்செல் மார்ஷ் ஆகியோரை எதிர்கொண்டு சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என்ற கேள்வி உள்ளது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link